Showing posts with label Carl Sagan. Show all posts
Showing posts with label Carl Sagan. Show all posts

Monday, June 30, 2008

இந்திய வானவியல் | கார்ல் சாகன்



Carl Sagan Portal

Carl Edward Sagan - Wikipedia

இந்திய வானவியல் பற்றிய சிறு ஆவணப்படம். உலகின் மிகப்பிரபல வானவியல் இயற்பியல் வல்லுநர் கார்ல்சாகன் வழங்குகிறார்.

கார்ல்சாகன் வலுவான லோகாதேயர். இறை நம்பிக்கை அற்றவர். ஜோதிடத்தைப் புறக்கணிப்பவர். இவ்வளவு இருந்தும் அவரைத் தில்லைக் கூத்தன் சந்நிதி இழுத்திருக்கிறது! இந்திய வானவியல் எவ்வளவு அருகே நவீன வானவியல் புரிதலுடன் ஒத்துப் போகிறது என்று சிலாக்கிறார் கார்ல்சாகன். ஆயினும் மேலைத்தவருக்கேயுரிய நக்கலுடன் இந்த ஒற்றுமை அறிவின் பாற்பட்டதல்ல, வெறும் coincidence (தற்செயலானது) என்று இந்திய அறிவியலைப் புறந்தள்ளிவிடுகிறார். ஆங்கிலக் காலனித்துவத்தால் இந்தியா இழந்தது எவ்வளவோ. அதில் நம் வேர்கள் பற்றிய எந்த விதப் புரிதலும் இல்லாமல் ஆங்கில வழியில் சிந்திப்பது பெரிய இழப்பு. இம்மாதிரி ஆவணங்கள் அதற்கு வழிவகுக்கின்றன. இந்தியத் தத்துவம் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொண்டு பேசுகிறார். நம்மவர் இம்மாதிரி ஆவணப்படங்கள் எடுத்து உலகிற்குச் சொன்னால் ஒழிய நம் பெருமை யாருக்கும் தெரியாது!