Showing posts with label carnatic music. Show all posts
Showing posts with label carnatic music. Show all posts

Thursday, April 19, 2012

கர்நாடக இசையில் சங்கப்பாடல்

Yayum Yayum - Brindavana Saranga - from Mathirakshi from ks1729 on Vimeo.



This poem appeared in the Poems on the Underground, Transport for London

Sunday, April 1, 2012

தமிழக தொல்லிசை - இராமானுஜ ஐயங்கார்

Sunday, November 15, 2009

இயலும் இசையும்



நிகழ்ச்சியில்: பேரா.வி.வி.சுப்பிரமணியன் (இயல்); நெய்வேலி சந்தானகோபாலகிருஷ்ணன்

நன்றி: விஸ்வஹிந்து இணையத்தொலைக்காட்சி

Saturday, November 1, 2008

ஆசை முகமறந்து போச்சே!

கண்ணன் என் காதலன்

ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகு முழுதில்ûல்
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.
ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும்.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டா?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?

(சுப்பிரமணிய பாரதி)

Friday, June 27, 2008

அதிசயக் குழந்தை (1)

அதிசயக் குழந்தை (2)



வாழ்வின் புரியாத புதிர்களில் ஒன்று மரணத்திற்குப் பின் என்ன? மறு ஜென்மம் உண்டா? என்பது!

இங்குதான் கண்டவர் விண்டதில்லை சமாச்சாரம் வருகிறது, ஏனெனில் நமக்கு போன ஜென்மத்தில் என்ன செய்தோம் என்று ஞாபகம் வருவதில்லை.

மறுஜென்மம் உண்டு என்று சொல்ல வரும் நிகழ்வு இன்று நிகழ்கலையில்.

ஒரு சின்ன வாண்டு ராகங்களைப் பட்டு, பட்டு என்று கண்டு சொல்கிறது! பாம்பே ஜெயஸ்ரீ சொல்வது போல் அவர் ஒரு ராகம் எடுத்து, அடுத்த ராகம் யோசிப்பதற்குள் இது சொல்லிவிட, அவர்களுக்கு யோசிக்க நேரம் கொடுப்பதில்லை இச்சிறுமி!

பச்சிளம் மாறாத முகம். கொட்டாவி விடுகிறது. கழுத்து செயினை நமண்டுகிறது. காது மட்டும் என்ன ராகம் என்பதில். ஆனால் குரலிலிருந்து ராகம் புறப்படும் போதே இவளிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்படும் போல..

கர்நாடக இசை| வயலின் (1)



எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், அவரது புதல்வி நர்மதா அவர்கள் இசைக்கும் வயலின் இசை. வயலின் தமிழிசைக்கு முத்துசாமி தீக்ஷ்தர் அவர்கள் குடும்பம் மூலமாக நுழைகிறது. மேலை வாத்தியமான அதை நம்மவர்கள் செல்ல நாய்குட்டிபோல் இவர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும்படி செய்துவிட்டது அதிசயம்தான்! நல்லவேளையாக நின்று கொண்டு வாசிக்காமல் உட்கார்ந்து வாசிக்கிறார்கள் (அதுவும் நம் adaptation தான்).

கர்நாடக இசை| வயலின் (2)

எம்.எஸ்.ஜி & நர்மதா

Thursday, June 26, 2008

ஜி.என்.பாலசுப்பிரமணியம் | ஆவணம் (1)



ஜி.என்.பி என்று மக்களால் சுருக்கமாக அழைக்கப்பட்ட ஜி.என்.பாலசுப்பிரமணியம் ஓர் இசைப்புயல். இதை நான் சொல்லவில்லை, பிறவிப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணா சொல்கிறார். இவர் காலங்களில் கர்நாடக இசை என்பது திரைக்குச் சென்று, பின் திரை மூலமாகப் பிரபலமாகி மீண்டும் இசைத்துறைக்குத் திரும்புவதைக் காணலாம். இன்றளவும் திரையில் பாடிய பாடகர்கள் கச்சேரிகளுக்கு கூட்டம் கூடுதலே. ஜி.என்.பி 5 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் பற்றிய ஆவணப்படம் நம் நிகழ்கலைக்கு பத்மநாப ஐயர் (லண்டன்) புண்ணியத்தில் வந்து சேர்கிறது!

ஜி.என்.பாலசுப்பிரமணியம் | ஆவணம் (2)



புரியாத புதிர்: தமிழர்கள் ஏன் பேட்டிகளில் இப்படி ஆங்கிலத்தில் கபடி விளையாடுகிறார்கள்?

Wednesday, June 25, 2008

டி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (4)

டி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (3)

டி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (2)

டி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (1)

Tuesday, June 24, 2008

செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர்



இன்று கர்நாடக சங்கீதம் என்று அறியப்படும் தமிழ் இசை சங்ககாலத்திலேயே வளர்ச்சியுற்று சிறப்புற்றிருந்ததை சிலம்பு செப்பும். கால ஓட்டத்தில் இவ்விசை பல்வேறு கூறுகளை இந்திய இசைப் பாரம்பரியங்களிலிருந்து எடுத்து வளர்ந்திருக்கிறது. இனிமேல் இதைத் திராவிட இசை என்றுதான் சொல்ல வேண்டும், ஏனெனில் இதன் சாகித்யங்கள் தெலுங்கிலும், கன்னடாவிலும், மலையாளத்திலும், தமிழிலும் அமைந்துள்ளன. வடமொழி பயிற்சியுள்ள பல சாகித்ய கர்த்தாக்கள் சமிஸ்கிருதத்தில் எழுதி இதை வளப்படுத்தியுள்ளனர். இதன் சமகாலப் பரிமாணம் இன்னுமொரு இந்திய ஒற்றுமை படிநிலையில் (pan Indian) நிற்கிறது. ஹிந்தி பஜன், மராட்டிய அபங், ஹிந்துஸ்தானி கzhaல் போன்றவை சமகாலப் பாடர்களால் நிறைய பாடப்படுகின்றன. இதையும் ஒருபடி தாண்டி அது சர்வ தேச முகமொன்றும் கொண்டுள்ளது. அதுதான் Fusion music என்பது. வெளிநாடு செல்வதென்பது பக்கத்து ஊருக்குச் செல்வது போல் ஆகிவிட்ட நிலையில் இவ்விசைக் கலைஞர்கள் வெளிநாட்டுக் குழுக்களுடன் சேர்ந்து பல கலப்பு சங்கீதத்தைத் தருகின்றனர். பக்தி இயக்கம் போல் தமிழ் மண்ணில் பிறந்த இந்த இசை ஒரு முழு உலகப்பரிமாணம் கொண்ட இசையாக மாறிவிட்டது. சினிமாவின் தாக்கமும் இதில் இப்போது சேர்ந்துள்ளது.

சமகால கச்சேரி பந்தா என்பதை அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் ஆரம்பித்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து பல பிரபல இசைக்கலைஞர்கள் இதை வளர்த்தெடுத்துள்ளனர். அரியக்குடியின் சிஷ்யர்களுல் ஒருவரான நாராயணசாமி ஐயர் போன்ரோரின் சமகாலத்தவர் செம்மங்குடி. இப்போது வாழும் கலைஞர்களில் மூத்த இசைஞர். இவர் தந்திருக்கும் ஒரு நேர்காணல் இன்று இடம் பெறுகிறது. முக்கியமாக இசையைக் காசுக்கு சொல்லிக்கொடுக்கக்கூடாது என்று ஒரு கருத்தை இவர் முன்வைக்கிறார். இது கல்வி பற்றி டாக்டர் இராதாகிருஷ்ணன் சொன்ன கருத்தோடு ஒத்துப்போகிறது!

இவர் பற்றிய குறிப்புகள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. அவை...

Seenu - as he was called in his younger days was born on 25th July 1908 to Sri Radhakrishna Iyer and Smt Dharmasamvardhini Ammal in a small village called Semmangudi in Tanjore district. Even as a child, he showed keen interest in music. He would repeat the music he heard. His maternal uncle, Sri Thirukodikaval Fiddle Krishna Iyer was already in the lime light as a successful musician. His cousin and Sri Krishna Iyer's son-in-law Sri Narayanaswamy Iyer was beginning to taste success as a musician.

So, Radhakrishna Iyer decided that his son would follow his uncle and cousin and become a musician. Little boy Seenu's formal music training started on the Vijayadasami day of 1917 under cousin, Sri Narayana Swamy who was also living in Semmangudi.


மேலும் அறிய...

Monday, June 23, 2008

மங்கள இசை | சுவாமி புறப்பாடு



ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் .

நாளும் திருக்கோயில்தனில் பூசை நேரங்களில் நாதசுரம் இசைக்கும் பண்கள்.

காலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும் பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்ட பண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூர தீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்து பள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டு இசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும் பாடலாம்)

* காலை 4.00 - 6.00 பூபாளம், பெளளி, மலயமாருதம், வலசி, நாதநாமக்கிரியை, மாயாமாயகெளளை.
* காலை 6.00 - 8.00 பிலகரி, கேதாரம், கெளளிபந்து, ஜகன்மோகினி, சுத்த தனயாசி.
* காலை 8.00 - 10.00 தன்யாசி, அசாவேரி, சாவேரி, ஆரபி, தேவகாந்தாரி, தேவமனோகரி.
* காலை 10.00 - 12.00 சுருட்டி, ஸ்ரீராகம், மத்தியமாவதி, மணிரங்கு, பிருந்தாவன சாரங்கா, தர்பார்.
* பகல் 12.00 - 2.00 சுத்த பங்காளா, பூர்ண சந்திரிகா, கோகில திலகம், முகாரி, கெளடமல்லார்.
* பகல் 2.00 - 4.00 நாட்டைக்குறிஞ்சி, உசேனி, ரவிச்சந்திரிகா, வர்த்தனி, அம்சாநந்தி, மந்தாரி.
* மாலை 4.00 - 6.00 பூர்வி கல்யாணி, பந்துவராளி, வசந்தா, லலிதா, சரசுவதி, சீலாங்கி, கல்யாணி.
* மாலை 6.00 - 8.00 சங்கராபரணம், பைரவி, கரகரப்பிரியா, பைரவம், நாராயணி, அம்சதுவனி. கெளளை.
* இரவு 8.00 - 10.00 காம்போதி, சண்முகப்பிரியா, தோடி, நடபைரவி, அரிகாம்போதி, கமாசு, ரஞ்சனி.
* இரவு 10.00 - 12.00 சிம்மேந்திர மத்யமம், சாருகேசி, கீரவாணி, ரீதி கெளளை, ஆனந்தபைரவி, நீலாம்பரி, யதுகலகாம்போதி.
* இரவு 12.00 - 2.00 அடாணா, கேதார கெளளை, பியாகடை, சாமா, வராளி, தர்மவதி.
* இரவு 2.00 - 4.00 ஏமாவதி, இந்தோளம், கர்நாடக தேவகாந்தாரி, தசாவளி, பாகேசுவரி, மோகனம்.

விழாக்கால வீதிஉலாக்களில் கோயில் உள்ளும் வெளியிலும் இசைக்கவேண்டிய முறைகள்

* மண்டகப்படி தீபாராதனை.

1. தளிகை எடுத்துவர - மிஸ்ர மல்லாரி
2. தீபாரதனை நேரம் - தேவாரம், திருப்புகழ்.
* புறப்பாடு
1. புறப்பாடு முன் - நாட்டை
2. புறப்பாடு ஆனதும் - யாகசாலைவரை - திருபுடைதாள மன்னியில் மற்ற தாளங்களில் மல்லரிகள்.
* யாகசாலை தீபாராதனை நேரம் - ஒத்து, நாதசுரம், மிருதங்கம் மாத்திரம்.
* யாகசாலை முதல் கோபுரவாசல் வரை - திருபுடைதாள மல்லரி.
* கோபுரவாசல் முதல் தேரடிவரை - இதர மல்லரிகளும் வர்ணமும்.
* தேரடியிலிருந்து தெற்குரதவீதி பாதி வரை - ராகம்.
* தெற்குரதவீதி பாதி முதல் மேலரதவீதி பாதி வரை - ராகம், பல்லவி.
* மேலைரதவீதி பாதி முதல் ஈசான்ய மூலை வரை - கிர்த்தனைகள்.
* ஈசான்ய மூலை முதல் தேரடி வரை - தேவாரம், திருப்புகழ்.
* தேரடி முதல் கோயில் பிரகாரம் வரை - நட்டுமுட்டு, சின்னமேளம் ( அல்லது முகவீணை )
* கோயிலுக்குள் - துரிதகால திரிபுடைதாள மல்லரிகள்.
* தட்டு சுற்று நேரம் - தேவாரம், திருப்புகழ்.
* எதாஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது - எச்சரிக்கை.

விழாக்காலங்களில் கொடிஏற்றத்தினன்றும் கொடி இறக்கத்தினன்றும் நவசந்திகளில் இசைக்க வேண்டிய பண் முறைகள்

* பிரம சந்தி - மத்தி - பைரவி.
* இந்தர சந்தி - கிழக்கு - குர்ஜரீ.
* அக்கினி சந்தி - தென்கிழக்கு - நாட்டை.
* இயம சந்தி - தெற்கு - தசாட்சரீ.
* நிருதி சந்தி - தென்மேற்கு - குண்டக்கிரிய.
* வருண சந்தி - மேற்கு - வராளி.
* வாயு சந்தி - வடமேற்கு - வேளாவளி.
* குபேர சந்தி - வடக்கு - ராமகலீ.
* ஈசான சந்தி - வட கிழக்கு - பிலகரி.

Sunday, June 22, 2008

ஜலதரங்கம் - நீரின் இசை



Jalatarangam-vatapi by Nemani Somayajulu
Vatapi-Hamsadvani-Adi-Deekshitar

இசை: நீமணி சோமயாஜுலு
பாட்டு: வாதாபி கணபதிம்
ராகம்: ஹம்சத்தொணி
சாகித்யம்: தீட்சிதர்

Saturday, June 21, 2008

இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி



பாவயாமி கோபால பாலம்!

Artist: Subbulakshmi M S
Ragam: Yamunakalyani
Thalam: Aadi
Composer: Annamacharya
Album: Subbulakshmi MS Live


raagam: yamunaa kalyaaNi

65 mEcakalyaaNi janya
Aa: S R2 G3 P M2 P D2 S
Av: S D2 P M2 P G3 R2 S

taaLam: khaNDa caapu
Composer: Annamaacaarya
Language:

pallavi

bhAvayAmi gOpAlabAlam manas-sEvitam tatpadam cintayEham sadA

caraNam 1

ghaTi ghaTita mEkhalA kacitamaNi khaNDikA paTala nina dEna viprAjamAnam
kuTila pada khaTita samkula simjitE natam caTula naTanA samujvala vilAsam

caraNam 2

niratakara kalita navanItam brahmAdi sura nikara bhAvanA shObhita padam
tiruvEnkaTAcala stitam anupam harim parama puruSam gOpAlabAlam

குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா!

Artist: Subbulakshmi M S
Ragam: Raagamaalika
Composer: Rajaji
Album: Kalki Golden Jubilee Golden Collection


raagam: raagamaalika (poem is sung in various raagams)
taaLam: usually aadi
Composer: Raajaaji
Language: Tamil

Pallavi shiva ranjani

22 kharaharapriya janya
Aa: S R2 G2 P D2 S
Av: S D2 P G2 R2 S


kuRai onRum illai maRaiMoorththi kaNNaa
kuRai onRum illai kaNNaa
kuRai onRum illai GOvinthaa

Anupallavi shiva ranjani

kaNNukku Theriyaamal niRkinRaay kaNNaa
kaNNukku Theriyaamal ninRaalum enakku
kuRai onRum illai maRaiMoorththi kaNNaa


CaraNam 1 shiva ranjani

VEndiyathai thanNthida VEnkaTEsan enRirukka
VEndiyathu VERillai maRaiMoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinthaa


CaraNam 2 kaapi

22 kharaharapriya janya
Aa: S R2 M1 P N3 S
Av: S N2 D2 N2 P M1 G2 R2 S


thiraiyin pin niRkinRaay kaNNaa - unnai
maRai Othum NYaaniyar mattuME kaaNpaar
enRaalum kuRai onRum enakkillai kaNNaa


CaraNam 3 kaapi

kunRin MEl kallaaki niRkinRa varathaa
kuRai onRum illai maRaiMoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinthaa


CaraNam 4 sindu bhairavi

10 naaTakapriya janya
Aa: S R2 G2 M1 G2 P D1 N2 S
Av: N2 D1 P M1 G2 R1 S N2 S


kalinNaaLukkiranNgi kallilE iRangi
nilaiyaaga KOvilil niRkinRaay KEsavaa


CaraNam 5 sindu bhairavi

yaathum maRukkaatha malaiyappaa - un maarbil
Ethum thara niRkum karuNai kadal annai
enRum irunthida Ethu kuRai enakku
onRum kuRai illai maRaiMoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinthaa

Tuesday, June 17, 2008

காணக் கண் கோடி வேண்டும் (4)

திரு.அர்த்தநாரீஸ்வரர் அவர்களின் உன்குழல் (YouTube) தொடுப்பு!



இங்குள்ள புழக்கடை சினிமாப் பார்க்க, இங்கே சொடுக்குக!