Tuesday, November 25, 2008

உத்தமம் வேங்கடரங்கன் பேட்டி

இணையத்தில் தமிழ் பெற்றுள்ள ஏற்றம், எழுத்துருவைச் சீரமைப்பதில் ஏற்பட்ட பல்வேறு கருத்துக்குழுக்கள், இன்று யூனிக்கோடு எவ்வகையில் உதவுகிறது என்பது குறித்த விவரம், விசைப்பலகை என்றால் என்ன, விசைப்பலகைகள் மாறுபட்டு அமைந்தது ஏன், ஆங்கிலத்தில் விசைப்பலகையின் ஒருசீர்மை, தமிழில் அத்தகைய ஒருசீர்மைக்கு யூனிக்கோடு எங்ஙனம் உதவுகிறது என்பது பற்றிய ஆய்வு, இன்றைய இளைஞர்கள் கணினித்துறையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இணையத்தில் நிகழும் பல்வேறு மோசடிகள், அவற்றைச் சமாளிக்கும் விதம், டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன, பணவரவு செலவில் அதன் பயன்பாடு யாது, இணைய வானொலி, இணையத் தொலைக்காட்சி ஆகியவை பெற்றுள்ள தனிச்சிறப்புகள், எதிர்காலத்தில் இணையம் பெறப்போகும் வளர்ச்சி, வலைப்பூக்களில் தமிழ் பெற்றுள்ள சிறப்பிடம்...

கணிப்பொறியாளர்கள் கைகட்டிச்சேவகம் செய்யவேண்டியதில்லை என்பதற்குத் தாங்களும் தங்களுக்கு முன்னரும் பின்னரும் வந்த தொழில் முனைவோர்கள் எடுத்துக்காட்டாக விளங்குவதைச் சுட்டிக்காட்டினீர்கள்.ஒபாமாவின் வருகையால் நமக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பதைச்சுட்டி அமெரிக்காவைப் பூச்சாண்டி காட்டிவருவோரின் அழிம்புக்கு முற்றுப்புள்ளி வைத்தீர்கள். தமிழக அரசு இதுவரை அளித்துவந்த ஒத்துழைப்புக்கு உத்தமத்தின் சார்பில் நன்றி தெரிவித்தீர்கள். இந்த அல்லது அடுத்த ஆண்டில் இணையமாநாடு நடத்தவேண்டிய சூழலை எடுத்துரைக்கத்தவறவில்லை.

முனைவர் மறைமலை இலக்குவனார்.

Thursday, November 20, 2008

மாபலிபுரம் கோயிலருகே அழிவு!

Saturday, November 1, 2008

ஆசை முகமறந்து போச்சே!

கண்ணன் என் காதலன்

ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகு முழுதில்ûல்
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.
ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும்.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டா?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?

(சுப்பிரமணிய பாரதி)

தீராத விளையாட்டுப் பிள்ளை - நாட்டியம்

தெய்வத்தைக் குழந்தையாக வைத்துக் கும்பிடுவானேன்? என்றொரு கேள்வி எழுகிறது. சின்ன பதில், நடைமுறையில் காணும் காட்சியில் உள்ளது. குழந்தை கள்ளமற்றது. அம்மா, அடித்தாலும், மீண்டும் வஞ்சனை இல்லாமல் அம்மாவிடமே வந்து ஒட்டுவது! இதனால்தான் "குழந்தையும் தெய்வமும்" ஒன்று என்றனர். இறைவன் பரவஸ்துவாக, பராக்கிரமனாக, தனது விஸ்வரூபம் காட்டினால் வீராதி வீரர்க்ள் கூட (உம்.விஜயன்) பயந்துவிடுவர். அவனே கண்ணனாகக் கீழிறங்கி (அவதாரம்) வந்தால் நாமெல்லாம் அவனிடம் அண்ட முடிகிறது. கண்ணனைத் தோழனாக, சகாவாகப் பார்க்கமுடிகிறது. இப்படி அவன் கீழிறங்கி வந்தால்தான் நமக்கு கதி. இல்லையெனில் நாம் எக்காலத்தில், யோகம், நியமம் கற்று, மலங்களை அகற்றி சுத்த ஜீவனாய் அவனிடம் போவது?

பாரதியின் தீராத விளையாட்டுப்பிள்ளை, கண்ணனின் பாலலீலைகளைப் படம் பிடிக்கும் அற்புதப்பாடல். இப்பாடலுக்கு இப்படிக்கூட பாவமிடமுடியுமா எனச் சவால் விடுகிறார் நர்தகி ராஜஸ்ரீ கிருஷ்ணன். இயக்கம் சங்கர் கந்தசாமி! கண்டு ரசியுங்கள்.

கண்ணனை சற்குருவாக மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அவனை நண்பனாக, தாயாக, காதலியாக, ஏன் வேலைக்காரனாகக் கூடப் பார்த்து அனுபவித்து இருக்கிறார் பாரதி!!