Tuesday, May 28, 2019

பேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்

இலங்கையின் மிக நீண்ட ஆறு என போற்றப்படும் மகாவலி ஆற்றின் கரையில் பேராதனை நகரில் அமைந்திருக்கின்றது பேராதனைப் பல்கலைக்கழகம். 700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பல்கலைக்கழக வளாகத்தை இது கொண்டுள்ளது. கண்டியிலிருந்து ஏறக்குறைய 10 கிமீ தூரத்தில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் காப்பித்தோட்டமாக இருந்த பகுதி இன்று உலகத் தரம் வாய்ந்த மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அறியப்படுகின்றது. இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமை நூலகராகப் பணிபுரியும் திரு.மகேஸ்வரன்
-இப்பல்கலைக்கழகத்தின் தோற்றம்
-இதன் அமைப்பு
-நூலகத்தின் தமிழ் நூல்கள்
-இங்கு அடித்தளத்தில் பாதுகாக்கப்படும் இலங்கையின் மிக முக்கியமான ஆவணங்கள்
-மிகப் பாதுகாப்பாக உள்ள பௌத்த சுவடிகள்
-அரிய தமிழ் சஞ்சிகைகளின் தொகுப்புக்கள்
..எனப் பல தகவல்களை இப்பேட்டியில் பகிர்கின்றார்.

இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்ச புராணத்தின் அடிப்படையில் காட்டு மிருகமான சிங்கத்திற்குப் பிறந்த சிங்கபாகுவின் மூத்த மகன் விசயன். இவனே இலங்கையின் முதல் மன்னன் என இப்புராணம் கூறும்.  சிங்கபாகுவின் நாடகத்தை அரங்கேற்றிய பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர அவர்கள் இந்தப் பல்கலக்கழகத்தில் பணியாற்றியவர். உலக அளவில் நாடகத்துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர அவர்களின் அனைத்து ஆவணங்களும், இந்தப் பல்கலைக்கழக நூலகத்தின் ஒரு அறையில் தனி முக்கியத்துவத்துடன் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் இந்த நூலகத்திற்கு உள்ள ஒரு சிறப்பு.

நூலகத்தின் அடித்தளத்தில் சுரங்கப் பகுதியில் ஒரு தனி அறை உள்ளது. இங்கு மிக அரிய சுவடிகளும் ஆவணங்களும் செப்பேடுகளும் பாதுகாக்கப்படுகின்றன. 5200 சுவடி நூல்கள் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.  இங்குள்ள சுவடிகள் சிங்களம், தமிழ், சமஸ்கிருதம், தாய்லாந்தின் தாய் மொழி என பல மொழிகளில் அமைந்தவை.

தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் இலங்கை மன்னர் பரம்பரையில் நாயக்க மன்னர்களின் கலப்பு அதிகமானது. அச்சமயம் பௌத்த சமயம் அதன் முக்கியத்துவம் இழந்தது; வைணம் தழைக்கத் தொடங்கியது. பின்னர் பௌத்த சமயத்தை மீட்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது தாய்லாந்திலிருந்து திரிபிடகம் கொண்டுவரப்பட்டு மீண்டும் இலங்கையில் பௌத்தம்   தழைக்கத் தொடங்கியது. அப்போது கொண்டு வரப்பட்ட அந்தத் திரிபிடக சுவடி நூல் இன்று இந்தப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னன் ராஜசிங்கன் காலத்து செப்பேடுகள் சிலவும் இந்த ஆவணப்பாதுகாப்பு அறையில் உள்ளன. இவை பெரும்பாலும் மன்னர் பலருக்கு அளித்த விருதுகளை விவரிப்பதாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட செப்பேடுகளாகும்.

பேராதனைப் பல்கலைக்கழ நூலகத்தில் இன்றைய எண்ணிக்கையின் படி ஏறக்குறைய 8 லட்சம் நூல்கள் உள்ளன. அவற்றுள் 1 லட்சத்து 40 ஆயிரம் தமிழ் நூல்களும் அடங்கும்.  இலங்கையில் வெளியிடப்படுகின்ற நூலின் ஒரு பிரதி இந்த நூலகத்தின் சேகரத்திற்கு அனுப்பப்பட வேண்டுமென்பது ஒரு சட்டமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழியப் பதிவு & தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
உதவி :  பேரா.முனைவர்.நா.கண்ணன், எழுத்தாளர் மதுமிதா

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, May 25, 2019

இலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்

அக்ட் 2, 2018
நுவரெலியாவில் பேருந்து நிலையத்திலிருந்து கண்டி நோக்கிய எமது பயணத்தின் இடையே ஒரு ஆவணப்பாதுகாப்பகம் இருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழக நூலகர்.திரு.மகேஸ்வரன் தெரிவிக்க, அதனை அறிந்து கொள்ள தொடர்ந்தது தமிழ் மரபு அறக்கட்டளையின் பயணம்.

பேருந்து நிலையத்தில் மாலை 5 மணி வாக்கில் இறங்கினோம்.  எங்களுக்காக ஆட்டோ வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்திருந்தார் ஒரு நண்பர். அவர் வேறு யாருமல்ல. அந்த ஆவணப்பாதுகாப்பகத்தின் அதிகாரி திரு. சந்தனம் சத்தியனாதன். அவரோடு ஆட்டோவில் ஏறக்குறைய 30 நிமிட பயணம்.  பசுமை எழில் நிறைந்த பகுதியில் கரடு முரடான சாலை. எங்கள் பயணம் தேயிலைத் தோட்டத்தின் ஊடே வழியில் சந்தித்த பெண் ஊழியர்களுடன் ஒரு கலந்துரையாடல் பதிவினையும் சேர்த்துத்  தொடர்ந்தது.

கி.பி.19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய கொடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ள முடியாது உயிர் வாழ புதிய நிலங்களுக்குப் புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் இலங்கையின் மலையகப்பகுதிக்கு வந்தனர். கடுமையான பல இன்னல்களைச் சமாளித்து காடுகளில் நீண்ட தூரம் கால்நடையாகவே பயணித்து மலையப்பகுதிகளுக்கு வந்தனர். முதலில் காப்பித் தோட்டங்களில் பணியில் ஈடுபட்டனர் இந்த மலையகத் தமிழ் மக்கள். காப்பித் தோடங்கள் பாதிக்கப்பட்டபோது  தேயிலைத் தோட்டங்கள் உருவாகத் தொடங்கின.  புதிய நிலத்திற்கு வந்தாலும் இங்கும் பல்வேறு இன்னல்களின் தொடர்ச்சி அவர்களை நம்பிக்கை இழக்க வைக்கவில்லை. அப்படி வந்து இலங்கையின் கணிசமான மக்கள் தொகையாக இன்று நிலைபெற்று விட்ட இந்திய வம்சாவளி தமிழர்களைப் பற்றியதே இந்தப் பதிவு.

இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு.  முறையான ஆவணப்படுத்தலின் அவசியத்தை உணர்ந்து மலையகத் தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்க்கை வரலாற்றினைப் பதிவு செய்திருக்கின்றது இங்குள்ள தேயிலைத் தோட்ட அருங்காட்சியகம். இலங்கையின் மலையகத்தில் நியூ பீக்கோக் தேயிலை எஸ்டேட் ராமன் துறை பகுதியில் அருங்காட்சியகம் மற்றும் ஆவணப் பாதுகாப்பகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் திரு. சந்தனம் சத்தியனாதன் இந்த விழியப் பதிவில் இந்த அருங்காட்சியகத்தைப் பற்றியும் மலையகத்திற்குத் தமிழக மக்கள் தொழிலுக்காகப் புலம் பெயர்ந்த வரலாற்று நிகழ்வுகளையும் விவரிக்கின்றார்.

புதிய வாழ்க்கையைக் கடினமான சூழலில் அமைப்பது எளிதல்ல. சொந்தங்களை இழந்து வாழ்வா சாவா என்ற சூழலிலேயே தினம் தினம் அன்று வாழ்ந்த அம்மக்களின் வாழ்க்கைச் சூழலில் இன்று படிப்படியாக சில மாற்றங்கள் வந்துள்ளன. ஆனாலும் நிவர்த்திக்கப்படாத பல அடிப்படை தேவைகள் அப்படியே இன்றும் தொடர்வது தான் அவலம்.

மலையகத் தமிழர்கள் பற்றிய வரலாற்று பின்புலத்தை அறிந்து கொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்கு இந்த விழியப் பதிவு பல தகவல்களை வழங்குகிறது.

விழியப் பதிவு & தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, May 19, 2019

முள்ளி வாய்க்கால் படுகொலை நினைவேந்தல்

ஜோகூர் பாரு, மலேசியாவில் நினைவேந்தல் கூட்டம்

Saturday, May 18, 2019

அறிவொளி இயக்கம் (சரஸ்வதி கந்தசாமி)

Watch the teaser!

Friday, May 17, 2019

நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை - பகுதி 3

நாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை தாழ்ந்தவை எனத் தரம் பிரித்து, அதில் மக்கள் கலைகளைத்  தாழ்மைப் படுத்தி புறந்தள்ளி வைத்து விட்டு மேட்டுக் குடி கலைகளாக, உயர்தன்மை வாய்ந்த கலைகளாக பரதத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் மட்டுமே காணும் போக்கு தமிழ் மக்கள் சூழலில் வளர்ந்தது கடந்த நூற்றாண்டில். அதன் தாக்கத்தை இன்றும் தொடர்ந்து காண்கின்றோம். இந்தச் சிந்தனைக்கு அடிப்படையாக இருக்கும் கருத்தியலை ஆராய்வதோடு, வளமான தமிழ் மரபின் முக்கிய அங்கமான மக்கள் கலைகளைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்கும் வகையில் தொடக்கப்புள்ளியாக இந்த நிகழ்வினைத் தமிழ் மரபு அறக்கட்டளை 2018, அக்ட் 14ம் தேதி சென்னையில் நிகழ்த்தியது.

அந்த நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியை இந்த விழியப் பதிவில் காணலாம். இதில் தமது ஆய்வு ரீதியான கருத்துக்களைப் பதிகின்றனர்:
-முனைவர்.கோ.பழனி, இணைப்பேராசிரியர், இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
-முனைவர்.ஜா.அமைதி அரசு, தமிழ்த்துறை, எல்.ஆர்.ஜி. அரசினர் மகலிர் கல்லூரி, திருப்பூர்
-முனைவர்.இரா.சீனிவாசன், பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை
-முனைவர்.மு,செல்லன், பேராசிரியர் (ஓய்வு), கரந்தை தமிழ்ச்சங்கக் கல்லூரி
-நாட்டுப் பாடல்கள் விளக்கம், முனைவர்.க.வெங்கடேசன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யாறு

மற்றும் கலந்து கொள்ள வந்திருந்தோரது கருத்துக்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.

தமிழர் மரபில் வழிபாட்டு அங்கமாகவும், கூத்து நாடக வடிவங்களிலும், கலை வடிவமாகவும்,   பல வேறுபாடுகளைக் கொண்டு தனித்துவமாகத் திகழும் ஆயிரக்கணக்கான கலைகள் இன்றும் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு சேர்க்கின்றன. இவற்றில் பல சுவடுகள் அழிந்து மறைந்து வருகின்றன. இவற்றை  ஆவணப்படுத்துவது ஒன்றே இக்கலைகளை நாம் அறிந்து கொள்ள எடுக்கக் கூடிய மிக முக்கிய முன்னெடுப்பாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு சொற்பொழிவாளர்கள் தங்கள் கருத்துக்களை இப்பதிவில் முன் வைக்கின்றனர்.

நம்மில் பலர் கேள்விப்பட்டிராத, அறிந்திராத பல கலைகளைப் பற்றி  இந்த 1 மணி நேர பதிவு வெளிச்சம் பாய்ச்சுகிறது. நாடகக் கலைகள், கூத்து, இசை, மானுடவியல் மற்றும் சமூகவியல் ஆய்வில் உள்ள மாணவர்களுக்கும் ஆய்வறிஞர்களுக்கும் இந்தப் பதிவு பயனளிக்கும்.

விழியப் பதிவு: அசோக் (சென்னை, தமிழகம்)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, May 14, 2019

அறிவொளி இயக்கம் (நா.கண்ணன்)

Watch the teaser!

Sunday, May 12, 2019

அறிவொளி இயக்கம் - மலேசியா!

தமிழர் உலகெங்கும் சிறுபான்மையர். அது ஒரு வகையில் நல்லதே. இவன் பிழைக்க வேண்டி புத்திசாலியாக இருக்கிறான். இயற்கைத் தேர்வின் அழுத்தம் இவன் மீது கூடுதலாகவே பாய்கிறது. அவ்வாறு இருக்கையில் இவனது இருப்பு என்பது தனக்கு சாதகமான தகவலை அறிந்து கொள்வதில் இருக்கிறது. இவனோ பல்வேறு தொன்மங்களைத் தானே உருவாக்கிக்கொண்டு இரண்டாம் தர, மூன்றாம்தரக் குடிமகனாக வாழத் தலைப்படுகிறான். இது தாழ்வு மனப்பான்மையால் விளைவது. இன்னொரு புறம் இதற்கு எதிர்வினையாக சினிமா பாணியில் ஒரு டெரர் இமேஜை உருவாக்கவும் முயல்கிறான். எத்தனையோ கல்விமான்களை உருவாக்கிய தமிழ்ச் சமுதாயம் ஒரு பண்பட்ட சமூகம் எனும் இமேஜைத் தருவதற்குப் பதில் டெரர் இமேஜைத் தருகிறது. இதுவும் பிழை.
மலேசியத் தமிழர்களுக்கு சட்ட ரீதியாக எல்லா உரிமையையும் குடியுரிமைச் சாசனம் வழங்குகிறது. ஆனால் அதை அறிந்து கொண்டு கேட்டுப் பெரும் திறமை, ஆளுமை கொண்ட தலைமை இங்கில்லை. அங்காலாய்த்துப் பயனில்லை. இதை மாற்ற வேண்டும். இளைய சமுதாயத்தை உரிமை அறிந்த சமுதாயமாக மாற்ற வேண்டும். புதிய தலைமையை உருவாக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டதுதான் "அறிவொளி இயக்கம்". இது " அறிவொளி அரங்கங்கள்" மூலம் செயல்படும்.
தமிழனுக்குள்ள அடுத்த பிரச்சனை தன் மரபு பற்றிய தவறான புரிதல். பல்லின வாழ்வில் நமது வேர்களைப் பற்றிய தெளிவு முழுமையாய் இருக்க வேண்டும். உதாரணமாக, கடவுள் ஒருவர். அவர் உருவமற்றவர். சிலையைக் கும்பிடுவது தவறு என்பது போன்ற பிற சமய ஆளுமை உள்ள நாட்டில் ஏன் தமிழன் பல தெய்வங்களை வழிபடுகிறான்? ஏன் நமக்கொரு திருக்குரானோ? விவிலியமோ இல்லை? இதற்கெல்லாம் பதில் தெரிந்திருக்க வேண்டும். தைப்பூசத்தில் அலகு குத்தி ஆட்டம் போடுவது, பியர் பாட்டிலை முதுகில் குத்தி காவடி எடுப்பது போன்ற செயல்கள் நமது இமேஜை இன்னும் கேவலப்படுத்துமே தவிர உயர்த்தாது.
தமிழ் மரபு என்ன? அதை எப்படித் தேடிக் காண்பது? நல் வழிகாட்டிகள் யார்? இதுவும் அறிவொளி அரங்கத்தில் விவாதிக்கப்படும்.
தமிழ் மரபு அறக்கட்டளை, மலேசியக்கிளை இத்தேவைகளை அறிந்து இந்த இயக்கத்தை பிற இயக்கங்களோடு இணைந்து முன்னெடுத்துச் செல்கிறது. இது காலத்தின் தேவை.
மலேசியத் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் செல்வி. சரஸ்வதி கந்தசாமி நாடறிந்த சட்ட ஆலோசகர், வழக்குறைஞர். சமூக ஆர்வலர், அரசியல் சிந்தனையாளர். இவர் தமிழன் அறிந்து கொள்ள வேண்டிய சட்ட நுணுக்கங்களை அறிவொளி அரங்கில் விளக்குவார்.
தமிழ் மரபு அறக்கட்டளை எனும் அமைப்பை 2001 ல் கோலாலம்பூரில் தோற்றுவித்து முனைவர் சுபாஷினியுடன் தலைமையேற்று கடந்த 20 வருடங்களாக நடத்தும் நான் தமிழ் மரபு பற்றியத் தெளிவைத் தரவுள்ளேன்.
அறிவொளியரங்கம் ஓர் திறந்த மேடை. "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்பதை மட்டும் முன் வைத்து நடத்தப்படும் இயக்கம். மக்களின் பங்கேற்பும், கலந்துரையாடலும் மிக அவசியம். இதைத் தேசிய அளவில் பல்வேறு ஊர்களில் நடத்த ஆவல். பிற அமைப்புகளின் தோழமை வேண்டப்படுகிறது. செம்பருத்தித் தோழர்கள் நமது முதல் அரங்கை ஜோகூர் பாரு (ஸ்கூடாய்) வில் நடத்த முன் வந்துள்ளனர்.
உங்கள் ஆதரவு தேவை. அறிவுற்ற சமுதாயமே நாளைய உலகை ஆளும். தமிழின் வேர்கள் ஆழமானவை, அறிவு பூர்வமானவை. வேர் கொண்டு விண்ணெழுவோம்!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!

Friday, May 10, 2019

நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை - பகுதி 2

நாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை தாழ்ந்தவை எனத் தரம் பிரித்து, அதில் மக்கள் கலைகளைத்  தாழ்மைப் படுத்தி புறந்தள்ளி வைத்து விட்டு மேட்டுக் குடி கலைகளாக, உயர்தன்மை வாய்ந்த கலைகளாக பரதத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் மட்டுமே காணும் போக்கு தமிழ் மக்கள் சூழலில் வளர்ந்தது கடந்த நூற்றாண்டில். அதன் தாக்கத்தை இன்றும் தொடர்ந்து காண்கின்றோம். இந்தச் சிந்தனைக்கு அடிப்படையாக இருக்கும் கருத்தியலை ஆராய்வதோடு, வளமான தமிழ் மரபின் முக்கிய அங்கமான மக்கள் கலைகளைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்கும் வகையில் தொடக்கப்புள்ளியாக இந்த நிகழ்வினைத் தமிழ் மரபு அறக்கட்டளை 2018, அக்ட் 14ம் தேதி சென்னையில் நிகழ்த்தியது.

அந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியை இந்த விழியப் பதிவில் காணலாம். இதில் தமது ஆய்வு ரீதியான கருத்துக்களைப் பதிகின்றனர்:
-முனைவர்.கோ.பழனி, இணைப்பேராசிரியர், இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
-முனைவர்.ஜா.அமைதி அரசு, தமிழ்த்துறை, எல்.ஆர்.ஜி. அரசினர் மகலிர் கல்லூரி, திருப்பூர்
-முனைவர்.இரா.சீனிவாசன், பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை
-முனைவர்.மு,செல்லன், பேராசிரியர் (ஓய்வு), கரந்தை தமிழ்ச்சங்கக் கல்லூரி
-நாட்டுப் பாடல்கள் விளக்கம், முனைவர்.க.வெங்கடேசன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யாறு

தமிழர் மரபில் வழிபாட்டு அங்கமாகவும், கூத்து நாடக வடிவங்களிலும், கலை வடிவமாகவும்,   பல வேறுபாடுகளைக் கொண்டு தனித்துவமாகத் திகழும் ஆயிரக்கணக்கான கலைகள் இன்றும் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு சேர்க்கின்றன. இவற்றில் பல சுவடுகள் அழிந்து மறைந்து வருகின்றன. இவற்றை  ஆவணப்படுத்துவது ஒன்றே இக்கலைகளை நாம் அறிந்து கொள்ள எடுக்கக் கூடிய மிக முக்கிய முன்னெடுப்பாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு சொற்பொழிவாளர்கள் தங்கள் கருத்துக்களை இப்பதிவில் முன் வைக்கின்றனர்.

நம்மில் பலர் கேள்விப்பட்டிராத, அறிந்திராத பல கலைகளைப் பற்றி  இந்த 1 மணி நேர பதிவு வெளிச்சம் பாய்ச்சுகிறது. நாடகக் கலைகள், கூத்து, இசை, மானுடவியல் மற்றும் சமூகவியல் ஆய்வில் உள்ள மாணவர்களுக்கும் ஆய்வறிஞர்களுக்கும் இந்தப் பதிவு பயனளிக்கும்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் இடம்பெறும்.

விழியப் பதிவு: அசோக் (சென்னை, தமிழகம்)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, May 4, 2019

நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை - கருத்துரையாடல் நிகழ்ச்சி - பகுதி 1

நாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை தாழ்ந்தவை எனத் தரம் பிரித்து, அதில் மக்கள் கலைகளைத்  தாழ்மைப் படுத்தி புறந்தள்ளி வைத்து விட்டு மேட்டுக் குடி கலைகளாக, உயர்தன்மை வாய்ந்த கலைகளாக பரதத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் மட்டுமே காணும் போக்கு தமிழ் மக்கள் சூழலில் வளர்ந்தது கடந்த நூற்றாண்டில். அதன் தாக்கத்தை இன்றும் தொடர்ந்து காண்கின்றோம். இந்தச் சிந்தனைக்கு அடிப்படையாக இருக்கும் கருத்தியலை ஆராய்வதோடு, வளமான தமிழ் மரபின் முக்கிய அங்கமான மக்கள் கலைகளைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்கும் வகையில் தொடக்கப்புள்ளியாக இந்த நிகழ்வினைத் தமிழ் மரபு அறக்கட்டளை 2018, அக்ட் 14ம் தேதி சென்னையில் நிகழ்த்தியது.

அந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியை இந்த விழியப் பதிவில் காணலாம். இதில் இடம்பெறுபவை
-நாகர்கோயில் முரசு கலைக்குழுவினரின்பறையிசை
-திரு.கோ.பாலச்சந்திரன் இ.ஆ.ப (ஓய்வு) வழங்கிய வாழ்த்துரை
-முனைவர்.க.சுபாஷிணி வழங்கிய தலைமையுரை
-ஆரணி நாளந்தா கலைப்பண்பாட்டுக் குழுவினர் வழங்கிய பனுவல் வாசிப்பு

விழியப் பதிவு: அசோக் (சென்னை, தமிழகம்)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]