Monday, November 18, 2019

இலங்கை நெடுந்தீவு உணவு - ஒடியல் கூழ்

மனிதர்கள் வாழ்கின்ற சுற்றுச் சூழலுக்கேற்ப உணவு வகைகள் அமைகின்றன. இலங்கை நெடுந்தீவு ஒரு தனித்துவம் வாய்ந்த தீவு. பனை மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் பனங்கிழங்கை வைத்து தயாரிக்கும் உணவுப் பொருட்களும் கடல் சூழ்ந்திருப்பதால் கடல் உணவுகள் அதிகமாக உணவில் பயன்படுத்தப்படுவதும் இயல்பாகவே உள்ளது. அத்தகைய ஒரு உணவு தான் ஒடியல் கூழ்.

அன்மைய தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரின் இலங்கை பயணத்தின் போது ஒரு நாள் நெடுந்தீவிற்குச் சென்றிருந்தோம்.  நெடுந்தீவுவாசியான திரு. கணபதி அவர்களது இல்லம் அழகிய இயற்கிய சூழலில் அமைந்த ஒரு குடில். பனைமரக் காடுகளுக்கு மத்தியில் ஒருகுடில். அருகிலேயே சமைப்பதற்காக ஒரு தனி கூரை வேந்த குடிலும் இருக்கின்றது.  ஒரு தபால் அதிகாரியான இவர் எங்கள் குழுவினருக்காக ’ஒடியல்’ கடல் கூழ் தயார் செய்து காட்டினார். அவருடன் அவரது துணைவியாரும், தோழி தருமசீலியும் விளக்கங்கள் அளித்தார்.

நெடுந்தீவு முழுமைக்கும் பனைமரம் நிறைந்துள்ளது. காயவைத்த பனங்கிழங்கை உடைத்து ஒடியல் மாவு செய்யப்படுகிறது. ஒடியல் கூழுக்கு மிக அத்தியாவசியமான பொருள் இந்த ஒடியல் மாவு தான்.  பனையோலைப் பிளாவில் அதை ஊற்றி மக்கள் சாப்பிடுகின்றார்கள். இந்த ஒடியல் கூழுடன் காயவைத்து நறுக்கிய பனங்கிழங்கு உருளைகளையும்  உண்ணக்கொடுக்கின்றார்கள். 

இந்தப் பதிவில் இந்த ஒடியல் கூழ் நெடுந்தீவில் சமைக்கப்படுவதைக் காணலாம்.


நன்றி:
திருமதி.தருமசீலி மற்றும் அவரது நெடுந்தீவு நண்பர்கள் திரு.திருமதி கணபதி குடும்பத்தினர்

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, November 16, 2019

கீழடி அகழாய்வின் சிறப்பு என்ன?

*கீழடி அகழாய்வின் சிறப்பு என்ன?* -
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் புஷ்பரட்ணம்

சமகாலச் சூழலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு அகழாய்வாகத் திகழ்வது கீழடி அகழாய்வு.
இந்திய நாகரிகம் வடக்கிலிருந்து தோன்றியது என்ற கருதுகோளை மாற்றிய தமிழக அகழாய்வுகளில் கீழடி அகழாய்வும் இணைகின்றது. கொடுமணம், பொருந்தல், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, அழகன்குளம், காவிரிப்பூம்பட்டினம் என நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் வெளிப்படுத்திய சிறப்புகளின் தொடர்ச்சியாகக் கீழடி அகழாய்வு தொடர்கிறது. தமிழகத்தின் எந்த நிலப்பகுதியில் அகழாய்வு செய்தாலும் பண்டைய மக்களின் வாழ்வியலையும் சங்ககால பண்பாட்டினையும் காட்டும் சான்றுகள் கிடைக்கும் என்கின்றார்  பேராசிரியர் டாக்டர்.புஷ்பரட்ணம்.  மேலும் அறிந்து கொள்ள பேட்டியை முழுமையாகக் காணவும்.



நன்றி:
பேராசிரியர் டாக்டர்.புஷ்பரட்ணம்
யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர்

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, November 9, 2019

இலங்கை கட்டுக்கரை அகழ்வாய்வு சொல்லும் செய்தி என்ன?

*ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு*
யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் புஷ்பரட்ணம்

அண்மையில் இலங்கையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில்  யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர் டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்கள் தலைமையில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்டது.  இந்த அகழ்வாராய்ச்சியில்  2400 வருடங்களுக்கு முன்னர், மக்கள் வசித்ததற்கான, அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்.புஷ்பரட்ணம் கூறுகின்றார்.



நன்றி:
பேராசிரியர் டாக்டர்.புஷ்பரட்ணம்
யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர்

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]