ain Thiruvembaavai by Avirodhi Aazhvaar
அவிரோதி ஆழ்வார் இயற்றிய சமண திருவெம்பாவை
வாரணங்கள் கூவ வரிவண்டு இசைபாடப்
பேரிகையுஞ் சங்கும் பிறதூரியமு ழங்கத்
தாரணியும் பிண்டிநிழல் தாமரையின் மீதிருந்த
வீரியனார் பாடேலோ வீதிதொறும் கேட்டிலையோ
காரிகையாய் நீஇன்னம் கண்கள் விழித்திலையோ
பாரீச பட்டர்மேல் பாசமும் இத்தனையோ
மாரனொடு காலனை முன்வாரா மலேகாய்ந்த
ஈறேழ் புவிக்கு இறையைப் பாடேலோர் எம்பாவாய். 9
உம்பர் பெருமான் உலகம் முழுதுணர்ந்தான்
செம்பொன் எயில்மூன்று உடைய சிநவரனார்
வெம்பு வினையகற்றி வேதம் பொழிந்தருளும்
சம்பு அருகன் சகல் செனன் அனந்தன்
விம்ப வடிவன் உயர்வீரன் அசோகத்தான்
நம்பெருமான் கோயில் நயந்த பிணாப்பிளைகாள்
தம்பேரேது ஊரேது தமரார் அயலார்
எம்பரிசால் பாடும் பரிசேலோர் எம்பாவாய். 10
தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 18
5 years ago