வரலாறு மீட்பு பணியில் ஒரு நாள்
ப்ரகாஷ் சுகுமாரன்
மனித இனங்களுக்கு இடையே ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல் பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் ஆதிக்கப் போட்டியினால் வீழ்த்தப்படுவது எதிரெதிரே நின்று மோதிக்கொள்ளும் இனங்கள் மட்டுமல்ல.. மனிதகுலத்தின் உண்மையான வரலாறும்தான்.
எங்கள் இனம்தான் உயர்ந்தது, நீண்ட பாரம்பரியம் கொண்டது, நீதி தவறாதது, வீரம் விளைந்தது என சொல்லிக்கொண்ட மனிதர்களுக்குள் உருவான ஆதிக்க போட்டியுடன் இயற்கையும் கை கோர்த்ததால் யார் கண்ணிலும் படாமல் மறைந்து போன வரலாறுகள் எத்தனையோ. இன்று உலகம் அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு தேவையான அடிப்படைகளை என்றோ, எங்கோ தொடங்கி விட்டு சென்ற முன்னோரின் வாழ்வியலை இன்னும் அடையாளப்படுத்திக்கொண்டு இருப்பவை இயற்கையின் சீற்றத்தையும், மனித சீற்றத்தையும் தாங்கி இன்னும் நிற்கும் ஒரு சில எச்சங்களே.
அப்படி தொலைந்து போன பழந்தமிழர்களின் உண்மையான வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள முயன்றபோது, கெடிலக்கரை நாகரீகத்தை மீட்டு எடுக்க தனது வாழ்வின் பதினைந்து ஆண்டுகளை பெண்ணை ஆற்றின் கரைகளிலும், மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும், மலை கிராமங்களிலும், பல நூறு ஆண்டுகளாக மனித காலடித்தடங்களே படாத அடர்த்தியான காடுகளிலும் கழித்துள்ள ஒருவரை பற்றி அறிந்தபோது அவரை வியந்து, பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அவரைப்பற்றி அறிந்து கொள்ளுமுன் சில நேரடி பதிவுகளை கண்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்போம்..
இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு
5 years ago
0 comments:
Post a Comment