Wednesday, June 27, 2012

பெரியபுராண ஆங்கில ஆக்கம்:ராபின் மெக்லாஷன்

3 comments:

பவள சங்கரி said...

திரு, ராபின் மக்கிலாசன் அவர்களின் மழலைத் தமிழ் கேட்க மிக இனிமை.. பாட்டன், பூட்டன் என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு மிக அழகாக தமிழ் கற்றுள்ளார்.. கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருந்தால் இன்னும் பல அரிய சேவைகள் நம் தமிழ்மொழிக்குச் செய்திருக்கலாம். அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய மனமார பிரார்த்திப்போம். இதனை அழகாக பதிவேற்றிய திரு கண்ணன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

அன்புடன்
பவள சங்கரி

Kanags said...

அலத்தார் மெக்கிலாசன் அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். விக்கியில் மெக்கிலாசன் பற்றிய கட்டுரை: http://tawp.in/r/39qx

S Karunanandarajah said...

வண. பிதா றொபின் மக்ளாசனுக்கு அஞ்சலி
எஸ். கருணானந்தராஜா

அன்னை தமிழாள் அரவணைத்துத் தத்தெடுத்த
உன்னதனாய் எங்கள் உடன் பிறவாச் சோதரனாய்
ஆங்கிலத்தால் அன்னை அழகை உலகினிடம்
ஓங்குவித்த செம்மல் உயிர் விட்டான் - ஏங்குகிறாள்

தன்றன் பெறாமகனைத் தவறவிட்ட தமிழன்னை

பெரிய புராணத்தை பெயர்த்தினிய ஆங்கிலத்தில்
உரிய முறையில் உலகிற்குத் தந்த மகன்
அரிய தமிழின்மேல் அன்பால் மகிழாசான்
உரொபின் மக்ளாசனென்னும் உயர்ந்த கலை ஞானி

விரைவில் மறைந்ததற்காய் விம்முகிறாள் தமிழன்னை

காலின் சிலம்பினதி காரத்தைக் கண்டுருகி
மேலும் அது துலங்கி மேதினியோர் காணவென
ஆங்கிலத்திற் செய்த அறிஞனவன் தன் மகன் ஏன்
ஏங்கவிட்டுச் சென்றான் எனப்பொறுக்க மாட்டாமல்

அன்னை தமிழாள் அழுதரற்றிச் சோர்கின்றாள்

சிற்றிடையில் மின்னும் செல்வ மணிமேகலையை
உற்றுப் பார்த்தஃதின் ஒளிகூட்ட முன்வந்து
தாய்க்காக ஆங்கிலத்தில் தமிழழகைக் காட்டிய தன்
சேய்க்கேன் மரணமெனத் தேம்பி மனங்குமுறி

உள்ளங் குலைந்துநெட் டுயிர்க்கின்றாள் தீந்தமிழாள்

நன்னூலைக் கற்று நமக்காய்க் கிரேக்கத்தை
அன்னை தமிழில் அறிவித்த நல்லாசான்
இன்னும் பலாண்டு இருக்காமல் ஏன்போனான்

என்று கவல்கின்றார் எம்மினத்து மாந்தரெலாம்

கிறித்துவத்துப் போதகராய் கீழைத் திசை செல்ல
மறித்து வைத்து என்றன் மகனாய் இருவென்று
தாய்த்தமிழாள் வேண்டத் தட்டாது தென்னாட்டில்
ஆய்ந்தறிந்த தன்றன் அறிவுச் சுரங்கத்தை

உலகுக்குணர்த்த உரைகள் பல செய்த

பேராசான் இன்று பிரிந்திட்டான் ஆனாலும்
பார்மீது எங்களது பைந்தமிழின் பேரழகை
யாரும் அறிய, நாங்கள் பெருமையுற
ஆர்வத்தினோடு அருஞ் சேவை செய்திட்ட

மக்ளாசன் ஐயா உம் வாழ்வெம் இதயத்தில்
ஆழப்பதிந்து அறிவூட்டும் - எப்போதும்
நித்தியமாம் ஜீவ நிறைவில் உமதான்மா
கர்த்தரோடொன்றிக் களிக்கும்.

ரொபின் மக்கிளாசன் ஐயா அவர்களைப் பிரிந்து வாடும்
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்