வணக்கம்.
திரு.நரசய்யாவின் 45 நிமிட பேட்டி ஒன்று ஒலிப்பதிவாக இன்றைய மண்ணின் குரலில் இடம்பெறுகின்றது.
இப்பேட்டியில் ஆலவாய் நூல் பற்றியும் இன்னூலை எழுத தாம் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றியும் படிப்படியாக விளக்கிச் செல்கின்றார் திரு.நரசய்யா.
- நூல் எழுத ஆரம்பித்த நாட்களில் ஐராவதம் மகாதேவனிடம் தமிழ் பிராமி எழுத்து வாசிக்க கற்றது
- சங்கப்பாடல்களில் மதுரை
- மதுரையில் சமணர் தடையங்கள்
- சமணர் வாழ்வியல்
- மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் உள்ள சமணர் பள்ளிகள் - குறிப்பாக ஆனைமலை, மாங்குளம்,மாமண்டூர், திருப்பரங்குன்றம், அழகர் கோவில், போன்ற இடங்கள்.
- மதுரைக் கோவில், திருமலை நாயக்கர் மகால், திருவாதவூர், திருமோகூர், ஓவாமலை ஆகிய இடங்களில் கல்வெட்டுக்கள்
- சமணர் கழுவேற்றம் பற்றிய தகவல்கள்
- ஜேஷ்டா தேவி
- பிலெடெல்பியா அருங்காட்சியகத்தில் உள்ள மதுரை கோயில் மண்டபம்
- இஸ்லாமிய படையெடுப்பில் நிகழ்ந்த கொடுமைகள்
- வள்ளால மகாராஜாவுக்கு நிகழ்ந்த கொடுமை
மதுரை தமிழகத்தின் முக்கிய கலாச்சார மையமாக பல நூற்றாண்டுகள் திகழ்ந்திருக்கின்றது. இந்நகரைப் பற்றி தமிழர்களாகிய நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு இந்தநூல் பெரிதும் உதவுகின்றது.
குறிப்பு: ஆலவாய் பற்றிய மேலும் ஒரு மின் தமிழ் பதிவு இங்கே உள்ளது.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]