வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இன்றைய வெளியீட்டில் இடம் பெறுவது பெறமண்டூர் சமண மகாமுனிவர் விஷேஷாகர முனி மகராஜ் அவருடன் நடத்தப்பட்ட பேட்டி.
இவர் மத்திய பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டவர். கர்நாடகா வழியாக மேல் சித்தாமூர் வந்து அங்கு கடுமையான தவ அனுஷ்டாங்களை மேற்கொண்டு தவக்கோலம் பூண்டவர். 2006ம் ஆண்டிலிருந்து இவர் தமிழகத்தில் இருக்கின்றார்.
குழந்தைகளுக்கு ஜைன சமய சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்றும் இல்லறத்தார் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைக் கொண்ட தமிழ் நூல்களையும் இவர் எழுதியிருக்கின்றார்.
பெறமண்டூர் மடம் சித்தாமூர் கிராமத்திற்கு தாய் கிராமம் என்ற பெருமையைக் கொண்டது. மேல்சித்தாமூர் சைன மடத்தின் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கும் மடமாகத் திகழ்வன இரண்டு மடங்கள். ஒன்று இந்தப் பெறமண்டூர் ஜைன மடம், அடுத்தது விழுக்கம் ஜைன மடம்.
இந்தப் பேட்டியில் மிகத் தெளிவான உச்சரிப்பு என்றில்லாத போதிலும் தம்மால் இயன்ற அளவிற்குப் பேசுகின்றார் இத்திகம்பர சுவாமிகள். மிகத் தெளிவாக மிக அழகான தமிழில் பிழையின்று சரளமாக எழுதக் கூடியவர் என மேல்சித்தாமூர் மடாதிபதி அவர்களே பாராட்டுரை தருகின்றார்.
இந்தப் பேட்டியில் ...
என விளக்கம் அளிக்கின்றார். பேட்டியின் முதலில் மேல்சித்தாமூர் மடாதிபதி அவர்கள் சிறிய அறிமுக உரை வழங்குகின்றார். அதன் பின்னர் இப்பேட்டி தொடர்கின்றது.
யூடியூபில் இப்பதிவைக் காண:
இப்பதிவு ஏறக்குறைய 29 நிமிடங்கள் கொண்டது.
சில படங்கள்...
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இன்றைய வெளியீட்டில் இடம் பெறுவது பெறமண்டூர் சமண மகாமுனிவர் விஷேஷாகர முனி மகராஜ் அவருடன் நடத்தப்பட்ட பேட்டி.
குழந்தைகளுக்கு ஜைன சமய சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்றும் இல்லறத்தார் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைக் கொண்ட தமிழ் நூல்களையும் இவர் எழுதியிருக்கின்றார்.
பெறமண்டூர் மடம் சித்தாமூர் கிராமத்திற்கு தாய் கிராமம் என்ற பெருமையைக் கொண்டது. மேல்சித்தாமூர் சைன மடத்தின் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கும் மடமாகத் திகழ்வன இரண்டு மடங்கள். ஒன்று இந்தப் பெறமண்டூர் ஜைன மடம், அடுத்தது விழுக்கம் ஜைன மடம்.
இந்தப் பேட்டியில் மிகத் தெளிவான உச்சரிப்பு என்றில்லாத போதிலும் தம்மால் இயன்ற அளவிற்குப் பேசுகின்றார் இத்திகம்பர சுவாமிகள். மிகத் தெளிவாக மிக அழகான தமிழில் பிழையின்று சரளமாக எழுதக் கூடியவர் என மேல்சித்தாமூர் மடாதிபதி அவர்களே பாராட்டுரை தருகின்றார்.
இந்தப் பேட்டியில் ...
- எது தர்மம்?
- உலக உயிர்கள் அனைத்தின் மேலும் அன்பு காட்ட வேண்டும்.
- இல்லறம்-துறவரம் இரண்டிற்குமான வித்தியாசங்கள்
- முனிவர்கள் கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டாங்கள்
- கடமைகள்
- நீதிகள்
என விளக்கம் அளிக்கின்றார். பேட்டியின் முதலில் மேல்சித்தாமூர் மடாதிபதி அவர்கள் சிறிய அறிமுக உரை வழங்குகின்றார். அதன் பின்னர் இப்பேட்டி தொடர்கின்றது.
யூடியூபில் இப்பதிவைக் காண:
இப்பதிவு ஏறக்குறைய 29 நிமிடங்கள் கொண்டது.
சில படங்கள்...
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
0 comments:
Post a Comment