வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இலங்கையில் நடைபெற்ற பல்லாண்டு கால யுத்தத்தின் தொடர்பாக ஆயிரக்கான உயிர் சேதங்கள் நிகழ்ந்தமை மிகுந்த வேதனைக்குறிய விஷயம்
அதே போல போரின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகமெங்கும் சென்று விட்ட ஒரு நிலை என்பது ஒரு புறமிருக்க இலங்கைக்குள்ளேயே அகதி முகாம்களில் தமிழர்கள் வைக்கப்பட்டிருக்கும் கொடுமை என்பது இன்னமும் தொடரும் அவலம்.
- அகதி முகாம்களில் இருக்கும் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனரா?
- அவரவர் நிலங்களில் மீண்டும் வாழ அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?
- யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி மேலும் பல தமிழர் பகுதிகளில் தற்சமயம் தமிழர் வாழ்க்கை எவ்வாறு உள்ளது?
- போருக்குப் பிந்திய தொடர் சமூக அவலங்கள் யாவை?
- குழந்தைகளின் கல்வி எவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளது?
- பெண்களின் பாதுகாப்பற்ற நிலை?
- இன்னமும் அரசு செய்ய வேண்டியவை யாவை?
இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது இந்தப் பேட்டி. இப்பேட்டியைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்குகின்றார் இலங்கை தமரசு கட்சியின் தலைவரும், இலங்கைத் தமிழ்த்தேசியக் கட்சியின் துணைத்தலைவரும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான ஐயா மாவை சோனாதிராஜா அவர்கள்.
இப்பதிவினை இவ்வருடம் ஏப்ரல் மாதம் டர்பன் நகரில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=PjcPBk8oVi4&feature=youtu.be
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
0 comments:
Post a Comment