வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
பண்டைய காலத்தில் தென் இந்திய பாடலிபுத்திரம் என்றும் பாடலிகா என்றும் வழங்கப்பெறும் திருப்பாதிரிப்புலியூர் சமண மத இலக்கியங்கள் பல உருவான மையமாகத் திகழ்ந்த ஒரு பகுதி. இந்தக் கல்விக்கூடத்தை நிறுவியவர் குந்த குந்தர் என்றழைக்கப்படும் ஹேளாச்சாரியார் என்ற சமண ஆசிரியர்.
இவர் எழுதிய நூல்கள், தமிழ், வடமொழி, சௌரசேனி ஆகிய மொழிகலில் உள்ளன. திருக்குறளை எழுதிய சமண ஆச்சாரியார் இவரே என்பது சமண மதத்தை பின்பற்றுவோரும் தமிழ் ஆய்வாளர் சிலரும் கொண்டிருக்கும் கருத்து. இவர் கி.பி.1ம் நூற்றாண்டு தமிழகம் வந்து வந்தவாசி நகருக்கு தென்மேற்கில் உள்ள பொன்னூர் மலையில் தங்கியிருந்ததாக சமண நூற்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இவர் எழுதிய நூற்களில் திருக்குறள், பஞ்சாஸ்திகாயம், பிரவசன சாரம், சமயசாரம், நியமன சாரம், பாரஸ அனுவேக்கா ஆகியவற்றுடன் எட்டு பாகுடங்கள், பல சமண பக்தி நூற்கள் உட்பட 84 நூற்கள் அடைபாளம் காணப்படுகின்றன. பொன்னூரில் சமண மத திராவிட அமைப்பிற்கு தலைவராக மாமுனிவர் ஹேளாச்சாரியார் இருந்தார் என காணப்படுகின்றது.
குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு - ஆர்.விஜயன்
இப்பதிவில் ஸ்ரீகுந்தகுந்தரின் பெயரால் இயங்கும் ஆய்வு மையமும் தியான மணடபமும் முதலில் இடம்பெறுகின்றது. இதனைத் தொடர்ந்தார் போல வரும் பகுதியில் சாலையின் நேர் எதிர்ப்புறம் அமைந்துள்ள மலையுச்சியில் அமைந்திருக்கும் ஸ்ரீ குந்த குந்தர் நினைவு மண்டபம் காட்டப்படுகின்றது. மலையுச்சிக்குக் செல்லும் பாதை மிக நன்கு பராமரிக்கப்பட்டுள்ளமையினால் மேலே செல்வதற்கு சிரமம் ஏதுமில்லை. நினவு மண்டபத்தின் உள்ளே ஆதியில் அமைக்கபப்ட்ட ஸ்ரீ குந்த குந்தரின் திருவடிகள் உள்ளன. அவை சிதலமடைந்திருப்பதால் புதிய திருவடிகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ குந்த குந்தரின் சிலை வடிவம் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, ஆகியோர்க்கு என் நன்றி.
9 நிமிடப் நேரப் பதிவு இது.
யூடியூபில் காண:
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
3 comments:
மனம் மகிழ்ந்து விட்டால் மனம் விட்டு பேசலாம். சுபாஷிணியை ஒரு நாள் கூப்பிட்டு வந்து ஷோடஷோபசாரங்கள் செய்து பஞ்சப்பக்ஷபரமான்ன அறுசுவை விருந்தோம்பி, தூக்க முடியாத மெகா புகழ்மாலை சூட்டவேண்டும் என்று அவா. அவர் தமிழ் மொழிக்கும், வரலாற்றுக்கும் செய்யும் மகத்தான பணி மிகவும் போற்றத்தக்கது.
இன்னம்பூரான்
மனம் மகிழ்ந்து விட்டால் மனம் விட்டு பேசலாம். சுபாஷிணியை ஒரு நாள் கூப்பிட்டு வந்து ஷோடஷோபசாரங்கள் செய்து பஞ்சப்பக்ஷபரமான்ன அறுசுவை விருந்தோம்பி, தூக்க முடியாத மெகா புகழ்மாலை சூட்டவேண்டும் என்று அவா. அவர் தமிழ் மொழிக்கும், வரலாற்றுக்கும் செய்யும் மகத்தான பணி மிகவும் போற்றத்தக்கது.
இன்னம்பூரான்
இந்தப் பதிவை எப்படிங்க படிப்பது? கண்ணைக் கட்டுதே?
Post a Comment