Saturday, February 4, 2017

மதுரை அமெரிக்கன் கல்லூரி கல்வெட்டு பயிற்சி - தொடக்கவிழா மற்றும் கண்காட்சி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

21.12.2016 வெள்ளிக்கிழமை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு நாள் கல்வெட்டு அறிமுகப் பயிற்சி நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளை திட்டமிட, இந்த நிகழ்ச்சியை நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது  மதுரை அமெரிக்கன் கல்லூரி. அந்த நாளில் இக்கல்லூரியில் உள்ள அரிய ஆவணங்கள், சேகரிப்புக்கள் ஆகியனவற்றை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒரு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்த நிகழ்வின் தொடக்கவிழா உரைகளை இன்று வெளியிடுகின்றோம்.  வரவேற்புரைக்குப் பிறகு நோக்க உரையும், வரவேற்புரையும் அதன் தொடர்ச்சியாக கண்காட்சி திறந்து வைத்துப் பொது மக்கள் பார்வையிடுதலும் இப்பதிவில் அடங்குகின்றன.

1:12 நிமிடம் - கல்லூரி முதல்வர் முனைவர் ம.தவமணி கிறிஸ்டபர் -  தொடக்க உரை
11:54 நிமிடம் - முனைவர்.சுபாஷிணி - நோக்க உரை
26:41 நிமிடம் - முனைவர்.மோனிக்கா - வரவேற்புரை
35:10 நிமிடம் - கண்காட்சி திறப்பு விழா, முனைவர்.பாண்டியராஜா திறந்து வைக்கும் காட்சியும் கண்காட்சியும்



நன்றி. இக்கருத்தரங்கஈ ஏற்பாடு செய்வதில் மிகவும் உறுதுணையாக இருந்த கல்லூரி நூலகர் முனைவர்.வசந்தகுமார் அவர்களுக்கும் நண்பர் செல்வம் ராமசாமி அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரத்தியேகமான நன்றியைப் பதிகின்றோம்.!

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

0 comments: