வணக்கம்.
அறிஞர்கள் நம்முடன் வாழும் போதே அவர்களது ஆய்வுகளைப் பற்றி அறிந்து கொள்வதும், அவர்களது ஆய்வுப் பணிக்காக அவர்களைப் போற்றிச் சிறப்பிப்பதும் அவசியம். நம்மோடு வாழ்பவர்களில் தம் வாழ்நாட்களையே ஆய்வுப் பணிக்காக அர்ப்பணித்து வாழும் சிலர் இருக்கின்றனர். மிகக் கடுமையான ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் களப்பணிகளை மேற்கொண்டு தகவல்களைச் சேகரித்து அவற்றை நூல்களாக வெளியிட்டு இத்தகையோர் தொடர்ந்து சமுதாயத்திற்கானப் பங்கினை மிகச் சீரிய வகையில் ஆற்றி வருகின்றனர். அத்தகையோரை அடையாளம் கண்டு போற்றும் பண்பு நம் சூழலில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
போலிகளைப் புகழும் கலாச்சாரம் தான் பெரும்பாலான தளங்களில் விரிவாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அத்தகைய நிகழ்வுகளுக்கு மத்தியில் தரமான ஆய்வுகளைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டு வரும் நல்லறிஞர்களை இனம் கண்டு பாராட்டுவதைத் தமிழ் மரபு அறக்கட்டளை முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளது.
இலக்கியமும் வரலாறும் தனது இரு கண்கள், என்கின்றார் தமிழகத்தின் நெல்லையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வறிஞர் திவான் அவர்கள்.
அவரது பேட்டியைத் தாங்கிய விழியப் பதிவே இன்றைய தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.
தனது முதல் நூலாகிய தென்காசி தந்த தவப்புலவர் என்ற நூல் தொடங்கி இவரது ஆய்வுகள் நூல்களாகப் பிரசவிக்கப்பட்டுக்கொண்டே உள்ளன.
குறிப்பிட்டு சொல்வதற்குச் சில உதாரணங்களாக
..களப்பணி அனுபவங்கள்
..ஆய்வு மாணவர்களளுக்கானக் குறிப்புக்கள்
..ஆவணப் பாதுகாப்பு பற்றிய தேவைகள்
எனப் பல தகவல்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.
அவர் வீட்டிலேயே இந்தப் பேட்டியின் பதிவு செய்யப்பட்டது
இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர்.சௌந்தர மகாதேவன், திரு.நாறும்பூ நாதன், சகோதரர் விஜய் (தீக்கதிர்) ஆகியோருக்கு எனது நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

- தமிழ் நாட்டின் மிகச் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவர்...
- சுமார் 100 அறிய நூல்களுக்கும் மேல் எழுதியவர்
- இன்றும் தொடர்ந்து ஆவணச் சேகரிப்பில் ஈடுபட்டு களப்பணிகளின் வழி தகவல்களைச் சேகரித்து அவற்றை ஆய்வு செய்து வெளியிட்டு வருபவர்
- 50,000க்கும் குறையாத நூல்களுடன் தன் இல்லத்தில் வாழ்பவர்
அவரது பேட்டியைத் தாங்கிய விழியப் பதிவே இன்றைய தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.
தனது முதல் நூலாகிய தென்காசி தந்த தவப்புலவர் என்ற நூல் தொடங்கி இவரது ஆய்வுகள் நூல்களாகப் பிரசவிக்கப்பட்டுக்கொண்டே உள்ளன.
குறிப்பிட்டு சொல்வதற்குச் சில உதாரணங்களாக
- ஆஷ் கொலை வழக்கு
- மாலிக் கபூர் பற்றிய தகவல்
- ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்
- கொற்கை துறைமுகம்
- இந்திய விடுதலைப் போரின் போது இஸ்லாமியர்களின் பங்கு
- மருதநாயகம் ஆய்வுகள்
..களப்பணி அனுபவங்கள்
..ஆய்வு மாணவர்களளுக்கானக் குறிப்புக்கள்
..ஆவணப் பாதுகாப்பு பற்றிய தேவைகள்
எனப் பல தகவல்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.
அவர் வீட்டிலேயே இந்தப் பேட்டியின் பதிவு செய்யப்பட்டது
இப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர்.சௌந்தர மகாதேவன், திரு.நாறும்பூ நாதன், சகோதரர் விஜய் (தீக்கதிர்) ஆகியோருக்கு எனது நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
0 comments:
Post a Comment