Sunday, July 28, 2019

அகழ்வாய்வுகளின் வழி தமிழ் எழுத்துக்களின் தொன்மையை அறிவோம் - பகுதி 2

தமிழ் மொழியின் பண்டைய எழுத்தான தமிழி (தமிழ் பிராமி)  கல்வெட்டுக்களிலும் மக்களின் புழக்கத்திலும் பயன்பாட்டிலும் இருந்திருக்கின்றன  என்பது நமக்கு தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கின்ற சான்றுகளாக அமைகின்றன. கி.மு.700 வாக்கிலேயே பொதுமக்களும் தங்களது பானை ஓடுகளில் பொறித்து வைக்கக்கூடிய வகையில் இந்த எழுத்து மக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்ற சூழலில் இந்த எழுத்துரு அதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாகி செம்மை பெற்று வளர்ந்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.

இறந்த வீரனுக்காக மக்களால்  எழுப்பப்படுபவை நடுகற்கள்.  நடுகற்களிலும் தமிழி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளமையை மிக அண்மைய கண்டுபிடிப்பை குறிப்பிட்டு இந்தப் பதிவு பேசுகிறது.

இதுகாறும் கிடைத்துள்ள தமிழி கல்வெட்டுக்கள் சமயம் சேராதவையாக இருப்பதும் இவ்வகை கல்வெட்டுக்கள் பொதுவாக யாரோ ஒருவர் யாருக்கோ வழங்கிய நன்கொடை, சேவை என்பதைச் சுட்டுவதாகவே அமைகின்றது என்றும்,  கிபி 4ம் நூற்றாண்டிற்குப் பிறகே பல்லவ ஆட்சி காலம் தொடக்கமே சமய சார்புடனான கல்வெட்டுக்கள் பெருகின  என்றும் இப்பதிவில் டாக்டர்.ராஜவேலு குறிப்பிடுகின்றார்.

இரண்டு பகுதிகளாக அமைந்த பேட்டியின் இறுதிப்பகுதி பகுதி இது.



இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த  டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. 

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, July 23, 2019

தமிழியின் (தமிழ்பிராமி) பழமை குறித்து டாக்டர்.க.ராஜன்

சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்னரே தமிழி எழுத்துக்கள் வழக்கில் இருந்தமையைத் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன. அசோகர் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் அமைந்தவை. இவை அசோகன் பிராமி எழுத்துருக்களால் எழுதப்பட்டவை. இவற்றின் காலம் கி.மு.3. அசோகன் பிராமியிலிருந்து தான் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துக்கள் உருவாகின என்ற ஒரு கருத்து பொதுவாக உள்ளது.  இப்பேட்டியில் அதனை மறுக்கின்றார் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன்.
 
தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களை அறிவியல் ரீதியாக ஆராயும் போது தமிழி எழுத்துக்கள் கி.மு.6க்கு முற்பட்டதாக இருப்பதையும்  மக்கள் மொழியாக தமிழி வழக்கில் இருந்தமையையும்  காண்கின்றோம்.   பேட்டியைக் காண


இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. 

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, July 17, 2019

சாளுவன்குப்பம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால முருகன் கோயில்

சாளுவன்குப்பம் அகழ்வாய்வுப்பணி தமிழகத்தின் முக்கிய அகழ்வாய்வுப் பணிகளில் ஒன்று. தமிழகத்திலேயே முதல் முதலில் முழு சங்ககால முருகன் கோயில் இங்கு தான் அகழ்வாய்வில் கிடைத்தது.

இந்தப் பதிவில்

  • சாளுவன் குப்பத்தில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்ட வரலாறு
  • முருகன் - மக்கள் தலைவன்
  • கல்லினால் செய்யப்பட்ட வேல் 
  • சுடுமண் உருவங்கள்
  • வைதீகம் உள்வாங்கிய முருகன் 
  • வைதீகத்தின் தாக்கத்தால் புராணக்கதைகள் முருகனுக்கு தெய்வயானையை இணைத்த செய்தி
  • இப்படி பல தகவல்களோடு வருகின்றது இப்பதிவு.



இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த  டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. 

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, July 12, 2019

பொருந்தல் அகழ்வாய்வுகள் சொல்லும் செய்திகள் என்ன?

சங்க கால குருநிலமன்னனாகிய பேகனின் பகுதியாக கருதப்படுகின்ற பொதிகையில் (பழனிக்கு  அருகில்) பொருந்தல் உள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் நெல்மணிகள் வைக்கப்பட்ட ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காலம் கி.மு 490 என இதனை ஆராய்ந்த அறிஞர்கள் கால நிர்ணயம் செய்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல.. இங்கு கண்டெடுக்கப்பட்ட அகழ்வாய்வுப் பொருட்கள் ஆச்சரியம் தரும் தகவல்களை வழங்குகின்றன.  பேட்டியைக் காண 



இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. 

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, July 9, 2019

கொடுமணல் அகழ்வாய்வு பற்றி பேரா.டாக்டர்.க.ராஜனின் பேட்டி

தமிழகத்தின் கொடுமணலில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறை சாற்றும் நோக்கத்தில் சிறப்பிடம் பெறுகின்ற ஒரு ஆய்வாகளாகும்.

கொடுமணலில்  மேற்கொள்ளப்பட்ட முந்தைய கள ஆய்வுகளில் முதலில் பெருங்கற்கால பண்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் புலவர் இராசு அவர்களின் கள ஆய்வுகள் கொடுமணல் நாகரிகத்தின் தொண்மையை வெளிக்கொணர்ந்தன. அதனைத் தொடர்ந்து டாக்டர்.க.ராஜன்  இப்பகுதியில் பல கள ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். இதுவரை அங்கு 120க்கும் மேற்பட்ட தொல்லியல் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  பேராசிரியர் சுப்பராயுலு அவர்களுடன் இணைந்து கொடுமணலில் ஆய்வுகள் தொடரப்பட்டன. பின்னர் 1990க்குப் பின்னர்  பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர்.க.ராஜனின் தலைமையில் இங்கு தொல்லியல் அகழ்வாய்ப்பணிகள் தொடர்கின்றன. 


  • இந்தக் கள ஆய்வுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இந்தியா முழுமைக்குமான அகழாய்வுப் பணிகளில், மிக அதிகமாகத் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கொடுமணிலில் தான் கிடைத்துள்ளன.
  • கரிமச் சோதனைகள் இப்பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்கள் கி.மு 5ம் நூற்றாண்டு பழமையானவை என்பதை நிரூபிக்கின்றன.
  • பண்டைய வணிகப் பெருவழிகளைப் பற்றிய விரிவான பல சான்றுகள் இந்த ஆய்வுகளில் கிடைத்துள்ளன.  


இப்படி மேலும்  பல சுவாரசியமான அகழ்வாய்வுச்செய்திகளை நம்மிடம் பகிர்கின்றார் தொல்லியல் அகழ்வாய்வு அறிஞர் டாக்டர்.க.ராஜன்.

தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் தமிழர் நாகரிகத்தின் தொண்மையைக் கீழடி அகழ்வாய்வுகளுக்கு முன்னராகவே வெளிப்படுத்திய பெருமை கொடுமணல், பொருந்தல், அரிக்கமேடு, அழகன்குளம், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் சான்று பகர்கின்றன. ஆயினும் கூட   இவ்வாய்வுச் செய்திகள் விரிவாக மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்பதும் ஒரு குறைபாடாகவே உள்ளது.

தமிழகத்தின் கொடுமணல் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொல்லியல்  பகுதி. 
இப்பேட்டியை நமக்காக வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் டாக்டர்.க.ராஜன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி. 

விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)



 

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]