மதுரை நகர் வரலாற்றுச் சிறப்புகள் பல நிறைந்த ஒரு மாநகரம். மதுரை நகரின் ஒத்தக்கடை நரசிம்மர் குடைவரை இன்று பக்தர்கள் நிறைந்து காணப்படும் ஒரு வழிபாட்டுத் தலமாகத் திகழ்கின்றது. இந்த குடைவரைக்கோயிலின் வரலாற்றையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் பற்றியும் அறிவோமா..? இக்கோயில் முற்கால பாண்டியர் காலத்து கோயிலாகும். கிபி 7ம் நூற்றாண்டில் பக்தி காலத்தின் பெரும் எழுச்சி பல சைவ வைணவ கோயில்கள் தமிழகத்தில் உருவாக்கம் பெறுவதற்குக் காரணமாகியது. இக்கோயில் பாண்டிய மன்னன் கோமாறன் சடையனின் அதிகாரியான மாறன் காரியென்பவனால் கட்டப்பட்டது. இக்கோயில் கட்டுமானப் பணி நிறைவடைவதற்கு முன்னரே இவன் இறக்கவே, அவனது தம்பி மாறன் எயினன் இந்தக் குடைவரைக் கோயில் கட்டுமானப் பணியைத் தொடர்ந்து செய்து நிறைவேற்றுகின்றான். இச்செய்தி கோயில் கருவறைப்பகுதியில் வலது இடது பக்கச் சுவர்களில் ஒரு பக்கம் வட்டெழுத்துத் தமிழிலும், மறுபக்கம் அதே செய்தி சமஸ்கிருத மொழியிலும் என செதுக்கப்பட்டுள்ளது.
இச்செய்திகளோடு மேலும் அக்கால பாண்டியர் கோயில் கட்டும் மரபு, குடைவரைக் கோயில் ஆகிய செய்திகளோடு இந்த விழியப் பதிவை வெளியிடுகின்றோம்.
இப்பதிவு தமிழ் மரபு அறக்கட்டளை 30.12.2019 அன்று ஏற்பாடு செய்த ஒரு நாள் மதுரை மரபுப்பயணத்தின் போது பதியப்பட்டதாகும். இதன் விளக்கங்களை வழங்குகின்றார் தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர்.கோ.சசிகலா. .
பதிவைப் பார்த்து வரலாற்றை அறிவோம்:
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments:
Post a Comment