வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
பெரம்பலூரிலிருந்து 17 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது இக்கோட்டை
இக்கோட்டையின் உள்ளே பீரங்கி மேடை, வழிபாட்டு மண்டபம், வெடி மருந்து கிடங்கு, தண்டனைக் கிணறு இஸ்லாமியர் வழிபட மசூதி, நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
1751 ஆம் ஆண்டு ஒரு பக்கம் ஆங்கிலேயரும் முகமது அலியும், இன்னொருபக்கம் சந்தாசாகிப் மற்றும் பிரெஞ்சுக்காரர்களும் எதிரெதிர் நின்று நடத்திய வலிகொண்டபோரின் சாட்சிக் களமாக இந்தக் கோட்டை இருந்து வருகிறது. தற்போது மத்திய அரசின் தொல்லியல் துறை இந்தக் கோட்டையைப் பராமரித்து வருகிறது.
கோட்டையின் வாயிற்பகுதியைக் கடந்து உள்ளே செல்லும் முன் விரிவான பூங்கா போன்ற ஒரு பகுதியைக் கடந்து செல்லலாம். இந்தக் கோட்டையைச் சுற்றி பசுமையான சூழல் அமைந்திருக்கின்றது. கோட்டைக்குச் சற்றே அருகாமையில் இருக்கும் கிராமங்களை இந்தக் கோட்டையின் மேற்பகுதியிலிருந்து நன்கு காணமுடிகின்றது. கோட்டையின் சுவர்கள் உருவாக்கப்பயன் படுத்தப்பட்டிருக்கும் கற்கள் மிக உறுதியானவையாகக் காட்சியளிக்கின்றன.
கோட்டையின் கட்டட அமைப்பு ஐரோப்பிய கட்டட பாணியை ஓரளவு ஒத்த வகையில் அமைந்திருக்கின்றது. ஆயினும் இடைக்கிடையே பொறுத்தப்பட்டுள்ள தூண்கள் இந்திய கோயில் கட்டட பாணியை ஒத்தவகையில் அமைந்திருக்கின்றன. இந்தக் கலவையான வடிவமைப்பு இந்தக் கோட்டையை மாறுபட்ட ஒன்றாகவே காட்டுகின்றது.
ரஞ்சன் குடி கோட்டை, திருச்சிக்கு அருகாமையில் உள்ள ஊர்களில் உள்ள வரலாற்றுச் சின்னங்களில், சிறப்பிடம் பெறும் ஒன்று என்பது மிகையல்ல.
ஏறக்குறை 13 நிமிட விழியப் பதிவு இது.
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=Ro7YmSTDMig&feature=youtu.be
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
இப்பதிவினைச் செய்ய உதவிய திருச்சி தூயவளனார் கல்லூரி பேராசிரியர் திரு.தமிழ்சூசை அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

2 comments:
வணக்கம் திரு சுபாஷினி அவர்களே, தங்களுடைய ரஞ்சன் கோட்டை காணொளி கண்டேன் மிக்க மகிழ்ச்சி, தங்களுடைய பணிசிறக்க வாழ்த்துக்கள் நன்றி, சுரேந்திரன், குண்டூர்
எனக்கு இது ஒரு இந்து வழிபாட்டு தலமாக இருந்து அதன்பின் இசுலாமிய கோட்டையாக உருமாறியிருக்கலாம் என தோன்றுகிறது, வாழ்த்துக்கள் நன்றி, சுரேந்திரன், குண்டூர்
Post a Comment