Sunday, February 26, 2017

திருக்குறள் ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் - முனைவர்.க.சுபாஷிணி

வணக்கம்.

11.02.2017 சனிக்கிழமை வட  அமெரிக்காவின் டால்லஸ் நகரில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திருக்குறள் விழா நடைபெற்றது. அதில் காலையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் மூன்று சொற்பொழிவுகள் இடம் பெற்றன. அதில் திருக்குறள் - ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் என்ற சொற்பொழிவின் பதிவு இன்று வெளியிடப்படுகின்றது.

சொற்பொழிவாலர். முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.



நன்றி. இப்பதிவை நமக்காக செய்து வழங்கிய திரு.அருண்குமார் (Frisco, Texas) அவர்களுக்கும் சாஸ்தா அறக்கட்டளை நிறுவனர்கள் திரு.வேலு திருமதி விசாலாட்சி ஆகியோருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரத்தியேகமான நன்றியைப் பதிகின்றோம்.!



அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Wednesday, February 22, 2017

பறையிசை நடனம்

வணக்கம்.


பறையிசை நடனம் பண்டைய தமிழர் மரபு சார்ந்த கலைகளில் ஒன்று. இவ்வாண்டு ஜனவரி 4ம் தேதி ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியில் நடைபெற்ற  தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையம் தொடக்க விழாவில் கல்லூரி மாணவர்கள் வழங்கிய பறையிசை நடனம் இது.

மிக நேர்த்தியாக பறையிசைக்கருவியை வாசித்துக் கொண்டு இளைஞர்கள் நடனம் ஆடுவது பார்ப்போரை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Saturday, February 4, 2017

மதுரை அமெரிக்கன் கல்லூரி கல்வெட்டு பயிற்சி - தொடக்கவிழா மற்றும் கண்காட்சி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

21.12.2016 வெள்ளிக்கிழமை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு நாள் கல்வெட்டு அறிமுகப் பயிற்சி நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளை திட்டமிட, இந்த நிகழ்ச்சியை நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது  மதுரை அமெரிக்கன் கல்லூரி. அந்த நாளில் இக்கல்லூரியில் உள்ள அரிய ஆவணங்கள், சேகரிப்புக்கள் ஆகியனவற்றை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒரு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்த நிகழ்வின் தொடக்கவிழா உரைகளை இன்று வெளியிடுகின்றோம்.  வரவேற்புரைக்குப் பிறகு நோக்க உரையும், வரவேற்புரையும் அதன் தொடர்ச்சியாக கண்காட்சி திறந்து வைத்துப் பொது மக்கள் பார்வையிடுதலும் இப்பதிவில் அடங்குகின்றன.

1:12 நிமிடம் - கல்லூரி முதல்வர் முனைவர் ம.தவமணி கிறிஸ்டபர் -  தொடக்க உரை
11:54 நிமிடம் - முனைவர்.சுபாஷிணி - நோக்க உரை
26:41 நிமிடம் - முனைவர்.மோனிக்கா - வரவேற்புரை
35:10 நிமிடம் - கண்காட்சி திறப்பு விழா, முனைவர்.பாண்டியராஜா திறந்து வைக்கும் காட்சியும் கண்காட்சியும்



நன்றி. இக்கருத்தரங்கஈ ஏற்பாடு செய்வதில் மிகவும் உறுதுணையாக இருந்த கல்லூரி நூலகர் முனைவர்.வசந்தகுமார் அவர்களுக்கும் நண்பர் செல்வம் ராமசாமி அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரத்தியேகமான நன்றியைப் பதிகின்றோம்.!

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​