Saturday, July 8, 2017

சுடுமண் வடிவங்கள்

வணக்கம்.

தமிழர் கலைகளில் ஒன்றான சுடுமண் சிற்பம் பற்றிய விழியப் பதிவு ஒன்று  இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.


சுடுமண் கலைச்சிற்ப அமைப்பு இன்று வழக்கொழிந்த ஒன்றாகி அருகி விட்டது. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட வகையில் கைதேர்ந்த கலைஞர்கள் தான் இந்த வடிவங்களை உருவாக்கியிருக்க வேண்டும். இதே போன்ற சுடுமண் சிற்பங்கள் இன்று தமிழகத்தின் ஓரிரண்டு இடங்களில் மட்டும் தான் காணக்கிடைக்கலாம்.

இன்றைய பதிவில் இடம்பெறும் சுடுமண் சிலைகள் 2 குதிரைகளும் ஒரு யானையும் என்ற வகையில் ஒரு மேடை மேல் நின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பண்ருட்டிக்கு அருகே சேமக்கோட்டை என்ற சிற்றூரில் இந்த சிற்பங்கள் உள்ளன.  ஒரு ஐயனார் கோயிலைச் சார்ந்த நிலையில் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.   ஐயனார் கோயில் சற்று புதுப்பிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. இந்த சிலைகள் இருக்கும் இடத்தைச் சுற்றி புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.

இவை நம் கண் முன்னே சிறிது சிறிதாக அழிந்து வருகின்றன. கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சுடுமண் குதிரைகள் வடிவத்தை நாம் பாதுகாக்க வேண்டாமா?

இந்த அரிய கலைச்சிற்பத்தைப் பாதுகாக்க இப்பகுதியின் தொல்லியல் துறையும் மாநில அரசும் தக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக்கொள்கின்றது.



இப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

1 comments:

kavithaiganesan said...

மிக சிறப்பான பணி.எங்கள் பண்ருட்டி நகருக்கருகில் பல்வேறு பழங்கால கோவில்கள் கல்வெட்டுகள் 1500 ஆண்டுகட்கு முற்பட்டவை காணப்படுகின்றன. சேமக்கோட்டை சுடுமண் குதிரை யானை பற்றிய கட்டுரை அருமை. அதைப்போலவே மற்ற இடங்களையும் கல்வேட்டுகளையும் பற்றி எழுத வேண்டுகிறேன்.கவிதைகணேசன். 675 முத்தையாநகர் எல்.என் புரம்.பண்ருட்டி செல் 9245103471