Tuesday, December 30, 2014

ஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோவில் - திருவாதவூர்



வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது. திருவாதவூர் திருமறைநாதர் ஆலயத்துக்கு அருகில்,  சுமார் 200 மீட்டர் தொலைவில்


அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில். இது தனி ஆலயமாகவே  உள்ளது. இக்கோயில் இருக்கும் இடமே மாணிக்கவாசகர்  அவதரித்த பகுதி.

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் என போற்றப்படுபவர் இவர்
இவர் பாடியவை திருவாசகம், திருக்கோவை. ஆகியவை. சிவபுராணத்தை அறியாத சைவர் இல்லை எனலாம்.

எளிமையான அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில்  நின்ற நிலையில் மாணிக்கவாசகர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.

யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=CSW6JDL-e8E&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8  நிமிடங்கள் கொண்டது.


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, December 28, 2014

பெறமண்டூர் சமண மகாமுனிவர் பேட்டி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இன்றைய வெளியீட்டில் இடம் பெறுவது பெறமண்டூர் சமண  மகாமுனிவர் விஷேஷாகர முனி மகராஜ் அவருடன் நடத்தப்பட்ட பேட்டி.


இவர் மத்திய பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டவர். கர்நாடகா வழியாக மேல் சித்தாமூர் வந்து அங்கு கடுமையான தவ அனுஷ்டாங்களை மேற்கொண்டு தவக்கோலம் பூண்டவர். ​2006ம் ஆண்டிலிருந்து இவர் தமிழகத்தில் இருக்கின்றார்.

குழந்தைகளுக்கு ஜைன சமய சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்றும் இல்லறத்தார் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைக் கொண்ட தமிழ் நூல்களையும் இவர் எழுதியிருக்கின்றார்.​

பெறமண்டூர் மடம் சித்தாமூர் கிராமத்திற்கு தாய் கிராமம் என்ற பெருமையைக் கொண்டது.  மேல்சித்தாமூர் சைன மடத்தின் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கும் மடமாகத் திகழ்வன இரண்டு மடங்கள். ஒன்று இந்தப் பெறமண்டூர் ஜைன மடம், அடுத்தது விழுக்கம் ஜைன மடம்.

இந்தப் பேட்டியில் மிகத் தெளிவான உச்சரிப்பு என்றில்லாத போதிலும் தம்மால் இயன்ற அளவிற்குப் பேசுகின்றார் இத்திகம்பர சுவாமிகள். மிகத் தெளிவாக மிக அழகான தமிழில் பிழையின்று சரளமாக எழுதக் கூடியவர் என மேல்சித்தாமூர் மடாதிபதி அவர்களே பாராட்டுரை தருகின்றார்.

இந்தப் பேட்டியில் ...

  • எது தர்மம்? 
  • உலக உயிர்கள் அனைத்தின் மேலும் அன்பு காட்ட வேண்டும்.
  • இல்லறம்-துறவரம் இரண்டிற்குமான வித்தியாசங்கள்
  • முனிவர்கள் கடைபிடிக்க வேண்டிய அனுஷ்டாங்கள் 
  • கடமைகள்
  • நீதிகள்


என விளக்கம் அளிக்கின்றார். பேட்டியின் முதலில் மேல்சித்தாமூர் மடாதிபதி அவர்கள் சிறிய அறிமுக உரை வழங்குகின்றார். அதன் பின்னர் இப்பேட்டி தொடர்கின்றது.



யூடியூபில் இப்பதிவைக் காண:  

இப்பதிவு ஏறக்குறைய 29  நிமிடங்கள் கொண்டது.

சில படங்கள்...





அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, December 24, 2014

கிறிஸ்மஸ் தின சிறப்பு வெளியீடு - மேல்சித்தாமூர் சமண மடம்

வணக்கம்.

கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.

இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் ஒரு விழியப் பதிவு இணைகின்றது.

மேல்சித்தாமூர் எனும் சிற்றூர் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னரான பழமையான சமண பீடம் அமைந்திருக்கும் பகுதி இது.  இந்த மாவட்டத்திற்கு மட்டுமன்றி  தமிழகத்தில் மிக முக்கியமான சமண மடமாகத் திகழ்வது மேல்சித்தாமூர் சமண மடம். இந்த மேல்சித்தாமூர் சமண மடம் ஜின காஞ்சிமடம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது. மடத்தோடு அமைந்திருக்கும் கோயிலில் பார்சுவநாதர் நேமிதார், ஆதிநாதர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில் பின்னர் சோழ மன்னர்களால் மிக விரிவாக்கப்பட்டது.

தற்சமயம் ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பேற்று மடத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து வருகின்றார்கள். மடத்தைச் சார்ந்து பள்ளிகளும் சில ஜிநாலயங்களும் இருக்கின்றன. கல்விச் சேவைக்கும் ஜிநாலாயங்கள் பாதுகாப்புக்கும் இந்த மடம் சிறந்த தொண்டாற்றி வருகின்றது.

2014 ஜூன் மாதம் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக இம்மடத்தின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் விரிவான ஒரு பேட்டியினை அளித்தார்கள்.  அப்பேட்டியின் விழியப் பதிவே இன்றைய சிறப்பு வெளியீடாக மலர்கின்றது.

மடத்தின் வரலாறு, தீர்த்தங்கரர்கள், காவி உடையின் பொருள், தமிழுக்கு சமணம் ஆற்றிய தொண்டு என மிக விரிவாக தெள்ளிய தமிழில் பேசுகின்றார் மடத்தின் தலைவர்.

சமணம் என்பது ஒரு சமயம் அல்ல.. அது வாழ்வியல் நெறி எனக் குறிப்பிட்டு மத நல்லிணக்கத்திற்கு இந்த ஜினகாஞ்சி மடம் உதாரணமாகத் திகழ்வதையும் இப்பேட்டியில் குறிப்பிடுகின்றார்.


யூடியூப் பதிவாக:https://www.youtube.com/watch?v=f7ZA_eW_DZ8&feature=youtu.be

இப்பேட்டி ஏறக்குறைய 1 மணி நேரப் பதிவு. இதனை நான் கடந்த ஜூன் மாதம் தமிழகம் சென்றிருந்த வேளையில் மேல்சித்தாமூருக்கு மேற்கொண்ட பயணத்தில் பதிவாக்கினேன்.

என்னுடம் உடன் வந்து பல்வேறு வகையில் உதவிகள் புரிந்த ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, டாக்டர்.பத்மாவதி ஆகியோருக்கும், இப்பதிவின்பை நான் செய்ய ஒத்துழைப்பு நல்கிய மேல்சித்தாமூர் சமண மடத்தின் நிர்வாகத்திற்கும் மடாதிபதி ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடத்தின் வலைப்பக்கம் http://jinakanchi.com/

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

Saturday, December 20, 2014

அயலகத் தமிழ் - சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு *டாக்டர்.நா.கண்ணன்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

ஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத் தமிழ் என்ற தலைப்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் சாகித்ய அகாதெமியின் சென்னைக் குழுவினர் அந்த நிகழ்வில் இடம்பெற்ற சொற்பொழிவுகளை வரும் நாட்களில் தொடர்ந்து பகிர்ந்து வந்தேன். மொத்தம் நான்கு விழியப் பதிவுகள் உள்ளன. அதில்   இன்று வெளியிடப்படுவது டாக்டர்.கண்ணன் வழங்கும் உரை.


யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=2To9W-w0qtk&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, December 5, 2014

புவியியல் அருங்காட்சியகம் - பெசண்ட் நகர்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

அருங்காட்சிகங்கள் பல வகை. புவியல் ஆய்வுகள், அதன் சான்றுகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகங்கள் உலகின் பல நாடுகளில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்குப் புவியல் தொடர்பான ஆய்வுத் தகவல்களை வழங்கும் சேவையைச் செய்கின்றன.

தமிழகத்தில் பெசண்ட் நகரில் அமைந்திருப்பது Geological Survey of India. இதன் டைரக்டராகப் பணிபுரிந்து வரும் திரு.எஸ்.சிங்காநெஞ்சன் அவர்கள் நம் மின்தமிழ் குழுமத்திலும் இருப்பது நமக்கு பெருமை.

இவரது கடின உழைப்பின் பலனாக இந்தஅருங்காட்சியகம் மிகச் சிறப்பாக வடிவம் கொண்டிருப்பதை நேரில் இங்கு சென்று காண்பவர்கள் உணரலாம்.

இவ்வாண்டு ஜூன் மாதம் நான் தமிழகத்தில் இருந்த சமயம் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களோடு இணைந்து இந்த அருங்காட்சியகம் சென்றிருந்தோம். அங்கு திரு. சிங்காநெஞ்சன் அவர்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சேகரங்களைப் பற்றிய முழு தகவல்களை வழங்கினார்கள். நண்பர் ஒரிசா பாலுவும் எங்களோடு இணைந்திருந்ததால் மேலும் கடலாய்வு தொடர்பான தகவல்களும் இந்தப் பதிவில் இணைந்தன.

நான் முதற்பகுதி வீடியோவை பதிவாக்கம் செய்ய, ஏனைய பகுதிகளை எனக்காக உதயன் பதிவு செய்தார்.

புகைப்படங்களைத் தொடர்ந்து இதே இழையில் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்த விழியப் பதிவில் திரு. சிங்காநெஞ்சன் அவர்கள் தரும் விளக்கம் மிகச் சிறப்பாக உள்ளது. அனைவரும் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.

இந்த அருங்காட்சியகம்செல்ல விரும்புவோருக்குக் கீழ்க்காணும் முகவரி உதவும்.

S.SINGANENJAM,
DIRECTOR,
GEOLOGICAL SURVEY OF INDIA,
A-2-B, RAJAJI BHAVAN, BESNAT NAGAR,
CHENNAI-600 090


யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=-ijymfDxPBk&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, November 21, 2014

சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு *முனைவர்.சுபாஷிணி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

ஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத் தமிழ் என்ற தலைப்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் சாகித்ய அகாதெமியின் சென்னைக் குழுவினர் அந்த நிகழ்வில் இடம்பெற்ற சொற்பொழிவுகளை வரும் நாட்களில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கின்றேன். மொத்தம் நான்கு விழியப் பதிவுகள் உள்ளன. அதில்   இன்று வெளியிடப்படுவது முனைவர்.சுபாஷிணி  வழங்கும் உரை.


யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=uUGTB6iNBzM&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 16 நிமிடங்கள் கொண்டது.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, November 20, 2014

அயலகத் தமிழ் - சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு *இளங்கோவன்*


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

ஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத் தமிழ் என்ற தலைப்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் சாகித்ய அகாதெமியின் சென்னைக் குழுவினர் அந்த நிகழ்வில் இடம்பெற்ற சொற்பொழிவுகளை வரும் நாட்களில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கின்றேன். மொத்தம் நான்கு விழியப் பதிவுகள் உள்ளன. அதில்   இன்று வெளியிடப்படுவது திரு.இளங்கோவன் அவர்களின் அறிமுக உரை.


யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=rJkfkkuQJ2E&feature=youtu.be
இப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


Tuesday, November 18, 2014

சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு - மாலன்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

ஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத் தமிழ் என்ற தலைப்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் சாகித்ய அகாதெமியின் சென்னைக் குழுவினர் அந்த நிகழ்வில் இடம்பெற்ற சொற்பொழிவுகளை வரும் நாட்களில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கின்றேன். மொத்தம் நான்கு விழியப் பதிவுகள் உள்ளன. அதில் முதலாவதாக இன்று வெளியிடப்படுவது திரு.மாலன் நாராயணன் அவர்களின் அறிமுக உரை.



இப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Tuesday, October 21, 2014

மண்ணின்குரல்: அண்ணன்மார் கதை

வணக்கம்.

மின் தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



இந்தச் சிறப்பு நாளில் தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

நாட்டார் கதைகள் தமிழர் வாழ்வியலில் முக்கிய அங்கம் வகிப்பவை. வாய்மொழிக் கதைகளாக உலவும் பல கதைகள் வரலாற்று விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு வாய்மொழி இலக்கியங்களாக விளங்குகின்றன. கதைகளாகச் சில, கதைப் பாடல்களாகப் பல... இப்படி நம் கிராம வழக்கில் இருக்கின்றன. அதே வேளை  ‘வரலாற்றுக் கதைப்பாடல்’ என்றும்  ஒருவகை இருக்கின்றது. அவை மக்கள் நாயகர்களாக விளங்குபவர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு புனையப்பட்டவை. இவ்வகை கதைப்பாடல்களில் வீரமும் மாட்சியும், பெறுமையும், அழகும், நளினமும் நிறைந்திருக்கும்.

இப்படி ஒரு கதைதான் கொங்கு நாட்டின் சிறப்பிற்குச் சிறப்புச் சேர்க்கும் அண்ணன்மார் கதை. அண்ணமார் சாமி கதை என்பது பொன்னர் , சங்கர் என்ற இரு வீரர்களையும் அவர்களது சகோதரி அருக்காணித் தங்கத்தையும் சேர்த்துப் பாடப்படும் கதைப்பாடல். கொங்கு நாட்டில்   சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு காவிரியின் கரையினை ஒட்டிய, இப்போதைய கரூர் – திருச்சி சாலையில் அமைந்துள்ள அமராவாதி ஆற்றினை உள்ளடக்கிய  பகுதியில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் வரலார்று பின்னனி கொண்ட கதை இது.

‘குன்னடையான் கதை’ என்றும் ‘அண்ணன்மார் கதை’ என்றும் இக்கதைப்பாடல் அழைக்கப்படுகின்றது. இக்கதையின் பல்வேறு கூறுகள் நாட்டார் வழக்காறுகளில் இடம்பெற்றுள்ளன.

2014 ஜூன் மாதம் ஈரோடு பொன்னி நகர் ஸ்ரீ செல்வ மரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் நடைபெற்ற அண்ணமார் கதைப்பாடலை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காகப் பதிவாக்கினோம். கரூரிலிருந்து வந்த கதைசொல்லிகள் இப்பாடலை வழங்குகின்றார்கள்.  கேட்டு மகிழ்வோம்.


யூடியூபில் இப்பதிவைக் காண:      https://www.youtube.com/watch?v=UUa_k6PW0Zc&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 58 நிமிடங்கள் கொண்டது.

இவ்வருடம் ஜூன் மாதம் தமிழகத்தில் இருந்த சமயத்தில் ஈரோட்டில் இக்கதையை பதிவாக்கினேன். இப்பதிவைச் செய்ய உதவிய திருமதி.பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு ஆகிய இருவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

 பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Tuesday, October 14, 2014

செங்கல் தயாரிப்பு (திருப்பாச்சேத்தி)

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

செங்கல் தயாரிப்பு என்பது மிகப் பழமையான ஒரு கலை. தமிழர் கட்டிடக் கட்டுமானத் துறையில் முக்கியாங்கம் வகிக்கும் ஒரு அடிப்படைத் தொழில் இது. மதுரைக்கு அருகே இருக்கும் மானாமதுரை, திருப்பாச்சேத்தி ஆகியபகுதிகளில் செங்கல் தயாரிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்ரன. குடிசைத் தொழில் என்ர நிலையிலும், சிறு வணிகம் என்ற நிலையிலும், விரிவான வர்த்தக நோக்கத்துடனும் என பலவகையில் இத்தொழில் இப்பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.


  

யூடியூபில் இப்பதிவைக் காண:      https://www.youtube.com/watch?v=ihSdjPC30uA

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.


இப்பதிவினை இவ்வருடம் ஜூன் மாதம் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இதன் பதிவிற்கு உதவிய திரு நாகரத்தினம் அவர்களுக்கு (முனைவர் காளைராசனின் சகோதரர்) நமது பிரத்தியேகமான நன்றி.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, October 2, 2014

மலேசியத் தமிழர்களின் வாழ்வியல்: 20ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலை - பகுதி 1

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கடந்த 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்தவர்கள் பலர் மலேசியாவின் பல மாநிலங்களில் தங்கி தங்களின் புதிய வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆயினும் பலர் இன்னமும் தமிழகத்துடன் தொடர்பு வைத்திருப்பதை நன்கு காண்கின்றோம். இத்தகைய விஷயங்களையும் பதிவு செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விழியப் பதிவு முயற்சிதான் இது.


இந்தியாவில் பெண் எடுத்து மலேசிய மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைப்பர் இக்காலத்தில் ஆனால் 1960களிலும், 70களிலும் மலேசியாவிற்கு வந்த இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட  சிலர் இந்தியாவிற்குப் பெண்ணை திருமணம் முடித்து அனுப்பி வைத்தனர்.

அப்படி ஒரு அனுபவத்தைக் கொண்டவர் தான் திருமதி.வசந்தா. இவர் இந்தியாவில் திருவாரூரில் பிறந்து மிக இளம் பிராயத்தில் மலேசிய பினாங்கு மானிலத்தில் வளர்ந்து அங்கே கல்வி கற்று பின்னர் பெற்றோர் விருப்பத்தின் பேரில் இந்தியாவில் தஞ்சையில் ஒரு கிராமத்து அதிகாரிக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டவர். அங்கிருந்த இவர் 25 ஆண்டுகள் இணைந்திருந்த அவ்வாழ்க்கையில் அவரது கணவர் மற்றொரு பெண்ணை மணம் முடிக்க விரும்பவும் அதற்கு உற்றார் உறவினர் சமாதானம் சொல்லி  இவரிடம் சம்மதம் பெறவும் முயற்சி செய்த போது மனம் உடைந்து  தனது 50வது வயதில் தஞ்சையிலிருந்து வெளியேறி பினாங்கிற்குத் தனியாக வந்து சேர்ந்தார்.

புது வாழ்க்கையை மீண்டும் தனது 50ம் வயதில் பினாங்கில் தொடங்கினார். இப்போது பினாங்கிலேயே உத்தியோகம் பார்த்துக் கொண்டு உறவினரோடு இருந்து சமூகத்  தொண்டும் செய்து வருபவர் இவர். 64 வயது பெண்மணி.

சென்ற ஆண்டு நான் கேரித் தீவிற்குச் சென்ற போது என்னுடன் எனது பேட்டியில் உதவுவதற்காக வந்தவரை அவர் கதையைச் சொல்லச் செய்து பேட்டி செய்தேன்.

இயல்பான பேச்சில் அமைந்தது இப்பதிவு. மக்கள் வாழ்க்கையும் சரித்திரம் தானே.   தனது அனுபவங்களைச் சொல்கின்றார்.  அதிலும் குறிப்பாக இந்த முதல் பதிவில் தனது இளம் பிராயத்து மலேசியாவில் பினாங்குத் தீவில் தனது பள்ளிக்கூட அனுபவங்களைச் சொல்கின்றார். இவை 1960களில் நடந்த விஷயங்கள். கேட்டுப் பாருங்கள்.


யூடியூபில் இப்பதிவைக் காண:  

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.


இப்பதிவினைக் கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Wednesday, September 17, 2014

கேரித் தீவில் தமிழர் குடியேற்றம்

வணக்கம்.

தமிழகத்தின் நாமக்கல்லிலிருந்து புலம்பெயர்ந்து சென்று மலேசியாவின் கேரித்தீவில் வசிக்கும் திரு முனுசாமி-காளியம்மாள் தம்பதியினரின் பேட்டி இன்றைய வெளியீட்டில் இடம் பெறுகின்றது.

1930ம் ஆண்டில் தமக்கு 1 வயதாக இருக்கும் போது ரஜூலா கப்பலில் மலாயா வந்தமை பற்றியும் அக்கால மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றியும் சுவாரஸியமாக பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் இத்தம்பதியினர். அவர்களோடு இவரது தம்பி மகள் காந்தியும் உடன் வருகின்றார்.

கப்பலில் சென்னையிலிருந்து பயணித்து பின்னர் நாகபட்டினம் வந்து அங்கும் மக்களை ஏற்றிக் கொண்டும் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டும் வரும் கப்பல் மலேசியாவின் பினாங்குக்கு வந்து ஆட்களையும் பொருட்களையும் இறக்கிய பின்னர் போர்ட் க்ளேங் துரைமுகத்தில் நிறுத்தி பயணத்தை முடித்துக் கொள்ளுமாம். 5 நாட்கள் பயணமாக கடலில் இந்தப் பயணம் இருந்திருக்கின்றது.

கல்வி பெறுவது என்பதை விட தோட்டத்தில் காடுகளை அழிக்கும் தொழில் செய்வதும் பின்னர் செம்பனைகளை நட்டு அங்கு பணி புரிவதுமே கனவாக அக்காலத்தில் இங்கு வந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்திருக்கின்றது. ஆயினும் கால மாற்றத்தில் இவர்களது குழந்தைகள் கல்வி கற்று உத்தியோகத்திற்குச் சென்று விட்ட நிலையில் இவர்களது வாழ்க்கை மலேசிய சூழலுடனேயே ஐக்கியப்பட்டு விட்டது. ஆயினும் தமிழகத்திற்கான இவர்களது தொடர்புகள் இன்னமும் உறுதியாகவே இருக்கின்றன.

இவர்களோடு தஞ்சாவூரைச் சேர்ந்த திருமதி வசந்தாவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இவர்களும் இவர்களது குடும்பத்தினர் அனைவருமே இந்தியாவிலிருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு மலாயா வந்தவர்கள்.



யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=AXXVvu26PLE&feature=youtu.be


இப்பதிவு ஏறக்குறைய 23நிமிடங்கள் கொண்டது.


இப்பதிவினைக் கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, September 10, 2014

மலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

புலம்பெயர்வு என்பது தொடர்ந்து நிகழ்வது. மலேசியாவில் இருக்கும் கேரித் தீவில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செம்பனைத்தோட்டங்களில் பணி புரிய வந்த நாமக்கல் பகுதி தமிழர்களின் குடியேற்றம் பற்றி சில செய்தியும் கோயில் வழிபாடு செய்யும் அம்மையாரைப் பற்றியும் சென்ற வாரம் ஒரு விழியப் பதிவு வெளியீடு செய்தேன்.இன்று மேலும் ஒரு விழியம் வெளியீடு காண்கின்றது. கேரித்தீவில் சுற்றுப் பயணம் செய்து அங்கு மக்கள் வாழ்வியல், இந்தத் தீவில் உள்ள மிகப்பெரிய செம்பனை ஆலையான  Sime Darby, கோயில்கள், தமிழ் பள்ளிகள், மருத்துவமனை ஆகியனவற்றைப் பதிந்துள்ள விழியம் இது.

தமிழிலும் சாலை பெயர் உள்ள மலேசிய தீவு இது என்பது கூடுதல் விஷயம்,

இன்றும் தமிழர்களே இத்தீவின் அதிகப் பெரும்பாண்மையினராக இருக்கின்றனர் என்பதுவும் ஒரு கூடுதல் செய்தி. அத்தோடு இங்கு வாழும் பழங்குடியினரும் மலாய் மக்களும் கூட தமிழ் பேசுகின்றனர். அதே போல தமிழ் மக்கள் மலாய் மொழியோடு பழங்குடியினர் மொழியையும் பேசுகின்றனர்.

பசுமை நிறைந்த இக்கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். வாருங்கள்.


யூடியூபில் இப்பதிவைக் காண:    https://www.youtube.com/watch?v=QXEoQcxzpMY&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 12 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Wednesday, September 3, 2014

மலேசியாவில் கிராமப்புர ஆலய பெண் பூசாரி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இறைவழிபாட்டு முறை என்பது பல்வகைப் படுகின்றது. தமிழகத்து சூழலில் ஒரு வகை என்றால் தமிழகத்தைக் கடந்து அயல்நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களின் நிலை சில மாறுபாடுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது.

மலேசியாவில் 1920லிருந்து 1940வரை ரப்பர் தோட்டங்களிலும் செம்பனை தோட்டங்களை உருவாக்கவும் தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் கப்பலில் நாகப்பட்டினம் வழியாக அழைத்து வரப்பட்டனர். நாமக்கல் பகுதியிலிருந்து வந்தவர்களில் பலர் கேரித் தீவில் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.

அப்படி வந்தவர்களில் பலர் இன்னமும் கேரித் தீவிலேயே தங்கி வாழ்கின்றனர். இங்கு வாழும் ஒரு பெண்மணி கோயில் ஒன்றினை தமது குடும்பத்தார் உதவியுடன் அமைத்து அதற்கு தாமே பூசாரியாகவும் இருந்து செயல்படுகின்றார்.

பூசை மந்திரங்கள் ஏதும் அறியாதவர். ஆனால் காலை மாலை கோயிலை சுத்தம் செய்து பூசை செய்து வழிபாடு இந்த ஸ்ரீ ராஜமுனீஸ்வரர் ஆலயத்தில் நிகழ்வதை பார்த்துக் கொள்கின்றார். அருகாமையிலேயே அவரது இல்லமும் இருக்கின்றது.

எழுதப் படிக்கத் தெரியாதவர். ஆனால் கற்பனையிலேயே பாடல் பாடக் கூடியவர். அவரது கோயில் பூசையையும் கற்பனை திறத்தில் அவர் பாடும் மக்கள் நலன் நாட்டுப் பாடல் ஒன்றையும் காட்டும் விழியப் பதிவே இன்று வெளியிடப் படுகின்றது.


யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=9gGCE08n7O4

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Sunday, August 31, 2014

சிகாகோ தமிழ்ச்சங்க விழா

அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!
கடந்த மே மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் சிகாகோ தமிழ்ச்சங்கம் தன்னுடைய 45ஆவது ஆண்டு தொடக்க விழாவையும், சிகாகோவில் இயங்கிவரும் தமிழ்நாடு அறக்கட்டளை(TNF) தன்னுடைய 40ஆவது ஆண்டு விழாவையும் ஒன்றிணைந்து நடத்தின.
அவ்விழாவிற்கு இந்தியாவிலிருந்து அறிஞர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். திரு. லேனா தமிழ்வாணன், திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் மகுடேஸ்வரன் முதலியோர் கலந்துகொண்டும், உரையாற்றியும் சிறப்பித்தனர். அவ்விழாவில் பேசுகின்ற அரிய வாய்ப்பை என் தந்தைக்கும், எனக்கும் சிகாகோ தமிழ்ச்சங்க நண்பர்கள் அளித்திருந்தனர்.

அமெரிக்கவாழ் தமிழ் உடன்பிறப்புக்கள் பலரையும் ஒன்றாய்க் காணுகின்ற நல்வாய்ப்பை அத் தமிழ்விழா எங்களுக்கு வழங்கியது எனில் மிகையன்று!
”திரைப்படம் சார்ந்த தலைப்புக்களில் பேசுங்கள்” என்ற கோரிக்கை எங்கள்முன் வைக்கப்பட்டதால், என்ன பேசுவது? என்று ஓரிரு நாட்கள் ரூம் போட்டு(வீட்டிலேயேதான் :-)) யோசித்தோம். ”தொடக்ககாலத் தமிழ்த் திரையுலகம்” பற்றி நான் பேசுகிறேன்; ”கண்ணதாசன் பாடல்களில் இலக்கிய நயம்” குறித்து நீ பேசு” என்றார் என் தந்தை.

”சரிதான்” என்று முடிவு செய்து சிகாகோ நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து எங்கள் தலைப்புக்கள் குறித்துத் தெரிவித்தேன். ”நல்ல தலைப்புகள்!” என்று கூறிய அவர்கள் ”கண்ணதாசன் பாடல்கள் குறித்துப் பேசுவதோடு வேறு சில கவிஞர்களையும் அப்படியே தொட்டுக் காட்டிவிடுங்கள்; அத்தோடு இன்னொரு வேண்டுகோள்; திரைப்படப் பாடல் வரிகள் சிலவற்றையும் முடிந்தால் பாடிக் காட்டிவிடுங்கள்!” என்று கூறி என்னைத் திகைக்க வைத்தனர்.

”இது ஏதடா சிகாகோவிற்கு (என்னால்) வந்த சோதனை!” என்று எண்ணிக்கொண்டு, ”சரி பாடுகிறேன்(!) ஆனால் வந்திருக்கும் கூட்டம் ஓட்டம் பிடித்தால் என்னிடம் கோபித்துக்கொள்ளக் கூடாது!” என்று சொன்னேன் கவலையோடு. ”உங்கள் உரையைக் கேட்க அமர்ந்திருக்கும் மக்களை இருக்கையிலேயே கட்டிப்போட்டு விடுகிறோம்…அவர்கள் எங்கும் ஓட முடியாது….கவலையை விடுங்கள்!” என்று எனக்கு அவர்கள் தைரியம் அளித்ததன் பேரில் பாடல் வரிகள் சிலவற்றைப் பாடச் சம்மதித்தேன். :-))
இவ்வாறு பல்வேறு முன்னேற்பாடுகளுடன் நடைபெற்ற அந்தத் தமிழ்விழா உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடந்தேறியது என்றுதான் கூறவேண்டும். அவ்விழாவை வெற்றி விழாவாக்கிய சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர், நண்பர் திரு. சோமு, தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர், நண்பர் திரு. அறவாழி (வள்ளுவத்திலிருந்த ஈடுபாடு காரணமாக அவர் தந்தையார் வைத்த பெயராம்!) ஆகியோருக்கு இத்தருணத்தில் மீண்டும் என் நன்றிகள்!
இனி, என் தந்தையின் உரையும், என்னுரையும் அடங்கிய காணொளிகள் உங்கள் கவனத்திற்கு…

திரு.ராமமூர்த்தி

மேகலா ராமமூர்த்தி


அன்புடன்,
மேகலா

Tuesday, August 26, 2014

சென்னை அரசு அருங்காட்சியகம்

எழும்பூர் மியூஸியம் என்று எல்லோராலும் சாதாரணமாக குறிப்பிடப்படும் சென்னை அரசு அருங்காட்சியகம், ஆசிய நாடுகளின் மிகப் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று.  இந்தியாவின் கல்கத்தா அருங்காட்சியகத்து அடுத்து இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் என்ற பெருமையையும் பெருவது இந்த அருங்காட்சியகம்.


1 மணி நேர பதிவாக இந்த விழியப் பதிவு அமைந்திருக்கின்றது. ஆக நன்கு நேரம் எடுத்துக் கொண்டு அமர்ந்து பார்த்து ரசிக்கலாம். இந்தப் பதிவில் அருங்காட்சியக கல்வித்துறை தலைவர் டாக்டர். பாலசுப்ரமணியம் மிக விரிவான விளக்கத்தை தமிழில் வழங்குகின்றார். இந்த விளக்கங்கள் குறிப்பாக

  • அருங்காட்சியகத்தின் ஆரம்ப கால நிலை
  • இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு சேகரிப்புக்கள்.
  • அருங்கலைச்சிற்பங்கள் தொகுப்பின் போது நிகழ்ந்த சிக்கல்கள்
  • இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் 
  • இங்கு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டதால் இங்கிலாந்தின் லண்டன் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்படாமல் தமிழகத்திலேயே இருக்கும் நிலை அமைந்த விஷயங்கள்
  • கால நிலைகளில் சிற்ப வடிவங்கள் - பல்லவர், சாளுக்கியர், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், நாயக்கர் கால சிற்பங்கள், தற்கால சிற்பங்கள்
  • யட்ஷி, தாந்திரீகம் பற்றிய தகவல்கள்
  • வெங்கலச் சிலை செய்யப்படும் விதம்
  • வெங்கலச் சிற்பங்கள் சேகரிப்புக்கூடம்
  • சைவம், வைஷ்ணவம் வெண்கலச் சிலைகளின் கூடம்
  • காசுகள், சின்னங்கள்
  • சிலைகள் பஞ்ச லோகத்தில் சிலை செய்யப்படுவதன் காரணம்

ஆகிய விஷயங்கள் பேசப்படுகின்றன.


யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=2c01fmD1d88&feature=youtu.be




அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

நெல்லூர் ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் கோயில்

ஆந்திர மாநிலத்திலிருக்கும் நெல்லூர் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட வைணவத்தலம். 11ம் நூற்றாண்டில் ஸ்ரீராமானுஜ மாமுனி ஏற்படுத்திய கோயில் முறைமைகளை இன்றளவும் கடைப்பிடிக்கும் கோயில் இது. ஆந்திர மாநிலத்தில் அமைந்தாலும் இக்கோயிலில் செந்தமிழ்ப் பாசுரம் கருவறையில் ஒலிக்கிறது, இராப்பத்து, பகல் பத்து உற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆழ்வார் பாசுரங்களை இமயம்வரை ஒலிக்கச் செய்த எம்பெருமானார் நினைவு போற்றுதற்குரியது.

Thursday, August 14, 2014

First audio London Internet TV - மகரந்த சிதரல்கள் பேட்டி









Wednesday, August 6, 2014

குன்னண்டார் குடைவரை கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

தமிழ் நாட்டின் கோயிற்கலையில் பிரமிக்க வைக்கும் தன்மையுடையன குடைவரை கோயில்கள். அந்த வரிசையில் இன்றைய வெளியீடாக மலர்வது புதுக்கோட்டைக்கு 35 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் குன்னண்டார் கோயில்.


பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு,  பின்னர் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தின் வரலாறுகளையும் கொண்டு, முத்தரையர்களின் ஆட்சியிலும் இருந்து பின்னர் நாயக்க மன்னர்களின் காலத்தில் மேலும் விரிவடைந்த ஒரு கோயில் இது. ஆலயத்தின் மூர்த்தி திருக்குன்றக்குடி மாதேவர் அல்லது திருக்குன்றக்குடி நாயனார் என்ற குறிப்பு இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. இக்கோயிலுக்குத் தேவரடியார்கள் செய்த தொண்டுகளை விவரிக்கும் கல்வெட்டுக்களும் இக்கோயிலின் பல பகுதிகளிலும் மண்டபத்திலும் இடம் பெருகின்றன.

கோயில் முழுமைக்கும் 37 கல்வெட்டுக்கள் பல்வேறு காலகட்டத்தின் வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று என்பதில் மறுப்பேதுமில்லை.

விழியப் பதிவைக் காண:   

யூடியூபில் இப்பதிவைக் காண:   https://www.youtube.com/watch?v=BeuNSWcvVT0&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 8 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். 

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Wednesday, July 16, 2014

இந்தோனீசியாவில் தொன்மையானதொரு இந்துக்கோயில்

சமீபத்தில் நடந்த தினமணிக் கருத்தரங்களிலும், பிற சமயங்களிலும் நான் தொடர்ந்து சொல்லிவரும் கருத்து இந்தியா தன் கூர்மையான பார்வையை கிழக்கு நோக்கித் திருப்ப வேண்டும் என்பதே!

தமிழனின் சரிதம் ஆழப்பதிந்த இடம் தென்னாசியா. அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மில் அதிர்வலைகளை உருவாக்க வேண்டும்.

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இந்துக் கோயில் இந்தோனீசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நூலகம் கட்ட மண்ணைத்தோண்டியபோது ஒரு முழுக்கோயிலே புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது!

Hindu Temple in Indonesia

இங்கு சோழர்களின் கைரேகை எவ்வளவு உள்ளது என்று நம் ஆய்வாளர்கள் அங்கு போய் ஆய்ந்து சொல்ல வேண்டும். தமிழக அரசு விரைவில் தென்னாசிய, தூரக்கிழக்கு ஆசிய ஆய்வு மையத்தைத் தொடங்கி இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

மலேசியா போல் இல்லாமல், இந்தோனீசிய அரசு தனது இந்துத்தொன்மையை மறைப்பதில்லை. 10 நூற்றாண்டில் கொற்கை தொடங்கி வியட்நாம்வரை ஒரு மாபெரும் இந்துப் பரப்பு இருந்திருக்கிறது! அதன் பல்வேறு கூறுகள் பற்றி நாம் அறிந்து கொள்ள இத்தகைய ஆய்வுகள் அவசியம்.


Friday, May 30, 2014

சோழ நாட்டுக் கோயில் - காமரதிவல்லி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

சோழர் காலக் கோயிலில் வரிசையில் மேலும் ஒரு பழமையான கோயிலின் பதிவை இன்று காணவிருக்கின்றோம்.

​தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தின் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்திருப்பது காமரதிவல்லி பாலாம்பிகை உடனுறை சௌந்தரேசுவர சுவாமி கோயில். இக்கோயில் சுந்தர சோழனால் இன்றைக்கு சுமார் 1050 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

மிக மோசமான நிலையில் சிதைந்திருந்த இந்தக் கோயில் சென்னையைச் சார்ந்த மாகாலக்‌ஷ்மி சுப்பிரமணியம் அவர்களது ட்ரஸ்ட் பெரு முயற்சியில் உள்ளூர் மக்களின் பேராதரவுடனும், ஒத்துழைப்புடனும், உழைப்புடனும் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகின்றது.


யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=Kxs-J4VNG4Q

இப்பதிவு ஏறக்குறைய 14 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் பின்னர் இணைக்கப்பட்டு அறிவிக்கப்படும்!

இவ்விழியம் 1.3.2013ம் நாள் பதிவாக்கப்பட்டது. இப்பதிவினைச் செய்ய துணை புரிந்த திரு.சுந்தர் பரத்வாஜ், டாக்டர்.பத்மாவதி, திரு.பரந்தாமன், காமரதிவல்லி ஆலயபொறுப்பாளர், கிராம நாட்டாமை, கிராம மக்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, May 24, 2014

திருச்சி தமிழ்ச் சங்கம்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


திருச்சி தமிழ்ச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழிலக்கியப்பணி மேற்கொண்டு செய்து வருகின்றது. திருச்சியின் மையத்திலேயே இச்சங்கத்திற்காக ஒரு கட்டிடமும் அமைந்துள்ளது. 

இச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், புதிய கட்டிடத்தின் தோற்றம் என விரிவாக விளக்குகின்றார் திருச்சி தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் (செயலாளர்).

இந்த விழியப் பதிவில் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றையும் சங்கத்தின் மேலும் ஒரு பொருப்பாளர் விளக்குகின்றார்.

இப்பதிவு கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நான் தமிழகத்தில் இருந்த பொழுதில் திருச்சி தமிழ்ச்சங்கக் கட்டிடத்திலேயே பதிவாக்கப்பட்டது.


யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=c86a_hHoE-w

இப்பதிவு ஏறக்குறைய  23  நிமிடங்கள் கொண்டது.



அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, May 17, 2014

சித்தன்னவாசல்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=PbY0WlLwXrg

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவிற்கான தகவல்களை எனக்கு அனுப்பி உதவிய திரு.நரசய்யா அவர்களுக்கும், டாக்டர். சுவாமிநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Friday, May 9, 2014

Water for All : DBS-NUS Social Venture Challenge Asia Semifinalist Spotl...

Thursday, May 8, 2014

கங்கை கொண்ட சோழபுரம் கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வெளியீட்டு வரிசையில் மேலும் ஒரு சிறப்பு மிக்க கோயில்.!


யூடியூபில் இப்பதிவைக் காண:  

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவில் சில தகவல்களை நமக்காகப் பகிர்ந்து கொள்பவர் தமிழகத் தொல்லியல் துறையின் டாக்டர்.பத்மாவதி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Thursday, May 1, 2014

Raja Ravi Varma - The Great Indian Painter


Created by Themozhy

World Heritage Sites in India

Click here to view the video!

This video clip is Created by Themozhy.

Tuesday, April 29, 2014

திருஎறும்பேஸ்வரர் கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வரிசையில் மேலும் ஒரு கோயில்.!

விலங்குகள் வழிபடும் ஆலயங்கள் என பிரத்தியேகமாக குறிப்பிடப்படும் ஆலயங்களின் வரிசையில் எறும்புகள் வழிபட்ட தலமாக கருதப்படுவது திருவெறும்பேஸ்வரர் கோயில். இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் புற்றுமண்ணால் உருவாகியிருக்கும் சுயம்புலிங்கம். அபிஷேக காலங்களில் லிங்க வடிவத்தின் மேல் கவசம் அணியப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது.

விழியப் பதிவைக் காண:


யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=7cfjTStpZ3U

இப்பதிவு ஏறக்குறைய 13 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் இங்கே!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவில் சில தகவ்ல்களை பகிர்ந்து கொள்பவர் இந்திய தொல்லியல் துரை ஆய்வு மாணவர் பரந்தாமன்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, April 12, 2014

கர்னல் காலின் மெக்கன்சி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடாக விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

காலின் மெக்கன்சி ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். இந்தோனீசியாவில் பணிபுரிந்து பின்னர் இந்தியாவிற்கு  நில அளவையாளராக பணி புரிய வந்தவர்.

இவரை பலரும் அறியாமல் இருக்கலாம். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமையிலும் ஆவணங்களைத் தேடியும் அவற்றை தொகுத்தும் வைத்தவர். தம் சொந்த பணத்தைச் செலவழித்து உதவியாளர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று அவர் தொகுத்தசுவடிகளும் படியெடுத்த கல்வெட்டுக்களும் இந்திய வரலாற்றைச் சொல்லும் சிறந்த ஆவணங்களாகத் திகழ்கின்றன.

மெக்கன்ஸி தொகுத்த ஆவணங்கள் மூன்று பகுதிகளாக சென்னையிலும், கல்கத்தாவிலும், லண்டன் நூலகத்திலும் உள்ளன.

2013 மார்ச் மாதம் எனது தமிழகப் பயணத்தின் போது நேரடியாக அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் சென்று நான் செய்த பதிவு இது.

காலின் மெக்கன்சியின் பணிகளை ஆய்வு செய்து இரண்டு நூல்களை வெளியுட்டுள்ள டாக்டர்.ம.ராஜேந்திரன் (முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழக் துணைவேந்தர்( தனது நூலில் இப்படிக் கூறுகின்றார்.

18,19ம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் ஆகியோரும் தமிழகத்திலே உ.வே.சா, வ.உ.சி ஆகியோரும் தொகுப்பிலும் பதிப்பிலும் ஈடுபட்டவர்களில் முன்னோடிகளாவார்கள். ஆனால் இவர்களுக்கு முன்பும் பக்தி இலக்கியக் காலத்திற்குப் பின்பும் ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தில் ஆட்பட்டுக் கிடந்த இந்தியாவில் தொகுப்புப் பணியைத் தொடக்கிவைத்த முதல் ஐரோப்பியர் கர்னல் காலின் மெக்கன்சியாவார்.

12 நிமிடங்கள் வருகின்ற இப்பதிவில் காலின் மெக்கன்சியின் தொகுப்பாக அமைந்திருக்கும் பல சுவடிகளையும் வியப்பில் ஆழ்த்தும் வடிவிலான சுவடிக்கட்டுக்களையும் காணலாம்.



யூடியூபில் இப்பதிவைக் காண:https://www.youtube.com/watch?v=l2cTvQ2T3hI

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

Sunday, April 6, 2014

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

​வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


இன்று மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிறந்த தினம். அதனை முன்னிட்டு மகாவித்வான் தங்கியிருந்து தமிழ்த்தொண்டு செய்த திருவாவடுதுறை ஆதீன மடம், புலவர்கள் விடுதி, சரசுவதி மகால் நூலகம். ஓலைச்சுவடி நூல்கள், ஆதீ​​னத்தின் சுற்றுவளாகம் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு சிறிய விழியப் பதிவே இன்று வெளியீடு காண்கின்றது. இப்பதிவு 13 நிமிடங்கள்

2013ம் ஆண்டு மார்ச் மாதம் திருவாவடுதுறை மடத்திற்கு நான் நேரில் சென்றிருந்த போது அங்கு பதிவு செய்யப்பட்ட விழியம் இது.

யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=NBk7eMt9gOY


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

Friday, April 4, 2014

மின்தமிழ் தோற்றமும், வளர்ச்சியும்: நா.கண்ணனுடன் நேர்காணல்

மணவை முஸ்தபா அவர்களின் புதல்வரும், நரம்பியல் மருத்துவரும், மணவை முஸ்தபா அறிவியல் அறக்கட்டளையின் அறக்காவலருமாகிய டாக்டர் செம்மல் அவர்கள் பேராசிரியர் முனைவர் நா.கண்ணனுடன் 12ம் உலகத்தமிழ் இணைய மாநாட்டின் (கோலாலம்பூர்) போது நடத்திய நேர்காணல்:

Thursday, March 27, 2014

மலையடிப்பட்டி குடைவரை கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


குடைவரைக் கோயில்கள் தமிழகத்தின் பல ஊர்களில் காணக் கிடைப்பவை. இன்றைய வெளியீட்டில் இடம் பெறுவது புதுக்கோட்டையில் உள்ள ஒரு குடைவரைக் கோயிலை காட்டும் ஒரு விழியப் பதிவே!

திருச்சியிலிருந்து ஏறக்குறைய 45 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் மலையடிப்பட்டி.  இது புதுக்கோடையைச் சார்ந்த கிராமம். இங்கு எழில் நிறைந்த இயற்கைச் சூழலில் ஒரு மாபெரும் பாறையில் இரண்டு கோயில்கள் ஒன்றாக என இணைந்து ஒரு குடவரைக் கோயில் அமைந்திருக்கின்றது.  ஒன்று சிவபெருமானுக்காகவும் மற்றொன்று அனந்தபத்மநாப ஸ்வாமிக்காகவும் என அமைக்கப்பட்ட கோயில்கள் இவை. இக்கோயில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த  தந்தி வர்மன் எனும்  பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என அறிய முடிகின்றது. இதே தந்தி வர்மனால் அமைக்கப்பட்ட ஸ்வஸ்திகா வடிவ கிணற்றினை ஒரு தனி விழியப் பதிவில் முன்னர் நாம் வெளியிட்டதை வாசகர்கள் அறிவீர்கள்.

இக்கோயிலின் உள் அமைப்பு புதுக்கோட்டையில் இருக்கும் திருமயம் ஆலயத்தை வடிவத்தில் ஒத்திருக்கின்றது. தெளிவாக செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் சுவற்றிலும் தூண்களிலும் நிறைந்திருக்கின்றன. 15 அடி உயரத்தில் மூலவர் சிலை   செதுக்கபப்ட்டிருக்கின்றது. மூலவர் சிலையைச் சுற்றிலும் தேவ கணங்களும் தெய்வ வடிவங்களும் என்ற வகையில் ஒரு கலைப்பொக்கிஷமாக இந்தச் சுவர் காட்சியளிக்கின்றது.

இக்கோயிலில் ஆங்காங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. அதில் ஒரு கல்வெட்டு கிபி.960ம் ஆண்டைச் சேர்ந்தது. இது சோழ மன்னன் ராஜ கேசரி சுந்தரச் சோழனின் கால கல்வெட்டு.

இந்தக் குடைவரை கோயிலின் அருகில் இருக்கும் பிரமாண்ட வடிவ பாறைகளின் மேல் சமணப் படுகைகள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.


கிபி. 7க்கு முன்னர் இப்பகுதியில் சமண சமயம் மிக விரிவாகp பரவி செழித்து இருந்திருக்க வேண்டும் என்பதை இந்த சமணப் படுகைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இக்கோயில் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பினை உணர்த்தும் கலைக்கோயில்கள் பட்டியலில் ஒன்றாக இடம்பெறுகின்றது. எண் 134, 135 http://asi.nic.in/asi_monu_alphalist_tamilnadu.asp.


இக்கோயிலைப் பற்றிய மிக விரிவான கட்டுரை ஒன்று வரலாறு.காம் வலைப்பக்கத்தில் உள்ளது http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=658 !

யூடியூபில் காண:https://www.youtube.com/watch?v=lbwAvYsuIIU


பதிவு செய்யப்பட்ட நாள்: 03.03.2013

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Friday, March 21, 2014

​மண்ணின் குரல்: மார்ச் 2014: சோழ நாட்டு கோயில்கள் - திருநீலக்குடி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


​திருநீலக்குடி​ திருக்கோயில் திருவாவடுதுறையிலிருந்து ஏறக்குறைய 4 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் சோழநாட்டுக் கோயில்களில் ஒன்று. மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களின் பட்டியலில் இடம்பெறும் இந்தக் கோயில் இன்று அதன் பொலிவு குறைந்த நிலையில் இருந்தாலும் அதன் எழில் குறையாமல் அமைந்திருக்கின்றது.

கோயிலில் எந்த கல்வெட்டுகளையும் காண இயலவில்லை. புணரமைப்பு நடந்து அவை மறைக்கப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் லிங்க வடிவத்து இறைவன் மானோக்யநாதர், நீலகண்டன் என்ற பெயர்களால் அழைக்கபப்டுகின்றார். அம்மை அனுபமஸ்தின் என்று குறிப்பிடப்படுகின்றார்.

இந்த ஆலயத்தில் தஷிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வயானையுடன் நின்ற நிலையில் இருக்கும் முருகப் பெருமான சிலைகள் அமைந்திருக்கின்றன. தேவர்கள் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்த போது தோன்றிய நஞ்சை உண்ட நீலகண்டனே இங்கு இறைவனாக எழுந்தருளி விளங்குவதால் இந்தத் தலம் திருநீலக்குடி என அழைக்கப்படலாயிற்று.

அப்பர் பெருமான் இந்தக் கோயிலில் உள்ள இறைவனுக்காகப் பாடிய ஒரு தேவாரப் பாடலும் உண்டு. 
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக்குடி னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே
                                             -அப்பர்


தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி தென் கரையில் இத்தலம் 32 வது. திருநாவுக்கரசர் திருப்பதிகம் பெற்றது. திருநாவுக்கரசு சுவாமிகளைச் சமணர்கள் கல்லோடு பிணைத்துக் கடலில் இட்டபோது அவர் இத்தல இறைவன் திருப்பெயரை ஓதிக்கொண்டே ஓதிக் கரையேறினார் என அவர் அருளிய தேவாரம் குறிப்பிடுவதைக் காணலாம்.(http://www.supremeclassifieds.com/places/?sgs=82&sT=2)

பண்:  தனித்திருக்குறுந்தொகை

கல்லினோடு எ[ன்]னைப் பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே.

பொது மக்களால் இந்தக் கோயிலைப் பற்றி குறிப்பிடப்படுகின்ற புராண விஷயங்களாக இருண்டு விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
1. இந்தக் கோயிலையே பிரகலாதன் முதன் முதலாக வழிபட்டார் என்ற குறிப்பு
2. இந்தக் கோயிலில் உள்ள மூலவர் (சிவலிங்கம்) அபிஷேகத்தின் ​போது மேலே சார்த்தப்படும் எண்ணையை உறிஞ்சிவிடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த இரண்டு தகவல்களையும் கோயில் குருக்கள் பேட்டியில் குறிப்பிடுவதைக் காணலாம்.

சோழர் காலத்தில் முக்கியத்தலங்களில் இது ஒன்றாக இருந்து அக்காலத்தில் சீரமைக்கப்பட்டு கற்ற்ளியாக மாற்றப்பட்ட இந்தக் கோயில் அதற்கும் சிலனு-ஊற்றாண்டுகளுக்கும் முந்தைய பழமை வாய்ந்த ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும் என்பதை அப்பர் பெருமான் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வேண்டி பாடிய தகவல்களின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். 

இப்பதிவு கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதத்தில் தமிழகத்தில் நான் இருந்த பொழுதில் பதிவாக்கப்பட்டது. 5 நிமிடப் பதிவு இது.

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=WDpNHLGMVvw


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

Sunday, March 16, 2014

மண்ணின் குரல்: மார்ச் 2014: ராஜேந்திர சோழன் அரண்மனை - மாளிகைமேடு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வரிசையில் முக்கிய இடம்பெறும் சில ஆலயங்களின் விழியப்பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை  வெளியிட்டு வருகின்றது. இன்று சற்றே மாறுதலாக வெளியீடு காண்பது ஒரு அரண்மை. அரண்மனை எனக் குறிப்பிடும் போது ஏற்படும் ஒரு எதிர்பார்ப்பை ஏமாற்றத்துக்குள்ளாக்கும் வகையில் அரண்மணை இருந்த கட்டிடத்தின் அடித்தளப்பகுதி மட்டுமே அமைந்திருக்கும் ஒரு பகுதியே இது!


'பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் மாமன்னன் முதலாம் ராஜேந்திரனின் ஆட்சிகாலத்தின் ஆயிரமாம் ஆண்டாக இவ்வாண்டு அமைகின்றது.

தன் ஆட்சி காலத்தில் தன் அரசாட்சியின் எல்லையை இந்தியாவின் வடக்குப் பகுதி வரை விரிவாக்கி, இலங்கையைக் கைப்பற்றி பின்னர் அதனையும் கடந்து  ஸ்ரீவிஜய அரசின் ஆட்சியை தோற்கடித்து கடாரத்தை வென்று, அன்றைய மலாயா முழுமையையும் கைப்பற்றி தனது ஆட்சி காலம் முழுமைக்கும் வல்லமை பொருந்திய ஒரு மாமன்னனாகத் திகழ்ந்த ராஜேந்திர சோழனின் அரண்மனைப் பகுதியின் பதிவே இன்றைய வெளியீடாக மலர்கின்றது.

மாளிகை மேடு என அழைக்கப்படும் இப்பகுதி தமிழக தொல்லியல் துறையினரால் அடையாளம் காணப்பட்டு ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையின் ஆய்வுகளும் இங்கு நிகழ்ந்திருக்கின்றன. 


கங்கை கொண்ட சோழ புரம் கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ஒரு கலைக்கோயில். யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றது இக்கோயில். இது இம்மன்னனால் கட்டப்பட்ட ஆலயமே. 

கருங்கற்களைக் கொண்ட நிலையான கோயிலை இறைவனுக்குப் படைத்து தனது அரண்மனைகளைச் செங்கற்களால் கட்டிய மன்னர்களின் வரிசையில் இவரும் ஒருவர். 

கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தின் தென்பகுதியில் சற்றேறக்குறைய 4 கிமீ தூரத்தில் இந்த அரண்மனைப்பகுதி அமைந்திருக்கின்றது.

அகழ்வாய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனையின் அடிப்பகுதியின் அமைப்பு நன்கு தெளிவாகத் தெரிகிறது. அதில் அறைகளும் பாதைகளும் துல்லியமாகத் தெரிகின்றன.  அகழ்வாய்வின் போது மாளிகைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களும் நாற்பதுக்கும் குறையாத கற்சிற்பங்களும் அரண்மனைப் பகுதிக்கு ஏறக்குறைய 30 மீட்டர் தூரத்தில் ஓரிடத்தில் மேடை போலப் போடப்பட்டு அங்கே அருங்காட்சியகம் எனப்பெயரிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகப் பகுதியில் காணப்படும் சிற்பங்களில் பெண்தெய்வங்களின் உருவங்கள் நிறைந்திருக்கின்றன. சரஸ்வதி, சப்தமாதர்கள், துர்க்கை, ஜேஸ்டா தேவி, அன்னபூரணி வடிவங்களோடு விநாயகர், பிரம்மா, ஐயனார், பைரவர் வடிவங்களும் உள்ளன.

கலைச்சிற்பங்களைப் பூட்டி இருக்கும் இடத்திலேயே நுழைந்து கடத்திச் செல்லும் நிலை இருக்கும் இக்காலத்தில் முறையான பாதுகாப்பு இல்லாமல் இந்த சிற்பங்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருப்பதைக் காணும் போது வரலாற்றுச் சான்றுகள் பாதுகாப்பில் நாட்டம் உள்ள அனைவருக்குமே வருத்தம் மேலிடும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமின்றி மாளிகை மேடு பகுதியில்  ஆய்வுக்கு தேவையான சில சான்றுகளும் இன்னமும் திறந்த வெளியில் தரையிலே கிடக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாமன்னனின் அரண்மனை இது. இந்த ஆய்வுகுட்படுத்தப்பட வேண்டிய பொருட்களும் சிற்பங்களும் அதன் சிறப்பு சற்றும் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டிய கடமை நமக்குண்டு. 


விழியப் பதிவைக் காண: 

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=grUJcjUmTP8

இப்பதிவு ஏறக்குறைய 9 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் இங்கே!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்து மிகவும் ஆதரவு நல்கிய நண்பர் திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனம் நிறைந்த நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Saturday, March 8, 2014

மண்ணின் குரல்: மார்ச் 2014: திருவெள்ளறை ஸ்வஸ்திகா கிணறு

வணக்கம்.

இன்று ஒரு வித்தியாசமான விழியப் பதிவு தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.


இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதம் செய்யப்பட்டது.

​திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோயில் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இருப்பது. ​பல்லவ மன்னம் முதலாம் நரசிம்மன் நிர்மாணித்த கோயிலாக இது அறியப்படுகின்றது.

இக்கோயிலின் பின்புற சுவற்றினைக் கடந்து​ புதர் நிறைந்த பாதையில் நாம் நடந்து சென்றோம் என்றால் சற்றே தூரத்தில் தமிழக தொல்லியல் துறையின் பாதுகாப்பில் அமைந்திருக்கும் ஸ்வஸ்திகா வடிவ கிணற்றினை வந்தடைவோம்.

ஸ்வஸ்திகா வடிவில் நான்கு மூலைகளைக் கொண்டதாக இந்தக் கிணறு அமைந்திருக்கின்றது. நான்கு புறங்களிலும் கீழிறங்க படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கத்தில் இருப்பவரை இன்னொரு பக்கத்தில் இருப்பவர் காணமுடியாதவாறு அற்புதமாக் இந்தக் கிணறு அமைக்கப்பட்டிருக்கின்றது.

கிணற்றின் மேல் பரப்பில் சுற்றிலும் கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கின்றன. அதன் மேல் ஆங்காங்கே நந்தி, நாகர் போன்ற சிற்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இக்கிணறு கி.பி. 800ம் ஆண்டில் பல்லவ மன்னன் தந்தி வர்மன் ஆட்சிகாலத்தில் கம்பன் அரையன் என்பவரால் உருவாக்கப்பட்ட கிணறு என்று தகவல் குறிப்பு சொல்கின்றது. தந்திவர்மனின் பட்டப்பெயர்களில் ஒன்றான மறிபீடுகுப்பெருங்கிணறு என அறியப்பட்ட விஷயமும் இக்கிணற்றில் சுற்றிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகின்றது.

யூடியூபில் இப்பதிவைக் காண:http://www.youtube.com/watch?v=lLMmVIKrRMI


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Wednesday, February 26, 2014

மண்ணின் குரல்: பெப்ரவரி 2014: மகா சிவராத்திரி - ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில்

வணக்கம்.

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) சிவராத்திரி தினத்தன்று ஈரோடு ஸ்ரீ மஹிமாலீஸ்வரர் சமேத மங்களாம்பிகை திருக்கோயிலில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் கோயிலில் செய்யப்பட்ட சிறப்பு சிவலிங்க பூஜை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது.


பூஜை ஏற்பாட்டில் இடம்பெறும் சிவலிங்கம், பூஜை பொருட்கள் ஆகியவை தயாரானதும் ஆலயத்தில் கருவறையில் இருக்கும் மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. அந்தச் சிறப்பு பூஜையும் இந்தப் பதிவில் பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் இணைந்து ஈரோடு திரு தங்க. விசுவநாதன் தலைமையில் சிவபுராணம் ஓதி சிவலிங்க பூஜை செய்வதைக் காணலாம்.


யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=t8I64GTDiHM


இந்தப் பதிவினை நான் செய்திட உதவிய திருமதி பவள சங்கரிக்கும் அவர் தம் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கும், அனுமதி வழங்கிய ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும், திரு தங்க விசுவநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ஆலவாய் - கடலோடி நரசய்யா - சன் தொலைகாட்சி பேட்டி

Friday, February 14, 2014

மண்ணின் குரல்: பெப்ரவரி 2014:திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கும் முந்தைய பழமையான ஒரு கோயில். இக்கோயிலினுள் சென்று கோயிலின் அமைப்பை பார்க்கும் போது நமக்கு மிக முக்கியமாக மூன்று மாறுபட்ட வகையிலான கட்டிட கட்டுமான அமைப்பு அங்கு இருப்பது தெரியும்.

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்தக் கோயிலின் ஆரம்பகால தோற்றம் பற்றிய செய்திகள் அறிய முடியாதவையாக உள்ளன. ஆயினும் கோயிலின் பழமையான வடிவம், சிற்பங்கள் மற்றும் இக்கோயிலில் இருந்த கல்வெட்டுகள் ஆகியவை இக்கோயில் படிப்படியாக விரிவாக்கப்பட்டமையை நன்கு வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.

கும்பகோணத்தில் இந்த ஆலயம் இருந்த பகுதி வரகுண பாண்டியன் காலத்தில் அதாவது 9ம் நூ. பிற்பகுதியில் பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது தெளிவு. அதனை சாட்சியாகக் கொள்ளும் வகையில் ஆலயத்திற்குள் வரகுண பாண்டியனுக்கு ஒரு சன்னிதி அமைந்திருக்கின்றது.


வரணகுண பாண்டியன் 

சோழர் வரலாற்றில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படுவது திருப்புறம்பயப்பெரும் போர். இப்போரில் சோழர்கள், பாண்டியர்கள் இருவர் அணியிலும் ஏறாளமானோர் இறந்தனர் என்பதும் இதன் இறுதியில் விசயாலயசோழனின் மகன் ஆதித்த சோழனின் படைகள் பாண்டியப் படைகளைத் தோல்வியுறச் செய்து வெற்றி கண்டது என்பதை அறிகிறோம் (பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார்). இந்த போருக்குப் பின்னர் கும்பகோணமும் போரில் வெற்றி கொண்ட சோழ நாட்டின் ஏனைய பகுதிகளும் சோழர்களால் மீட்கப்பட்டன.

அதன் பின்னரும் போர்கள் பல நடந்தாலும் ஆதித்தனுக்குப் பின் வந்த முதலாம் பராந்தகன் தன் ஆட்சியை மேலும் விரிவு படுத்தி பெரிதாக்குகிறார். திருவிடை மருதூர் ஆலயத்தின் மிகப் பெரிய கட்டுமானப் பணி இந்த  முதலாம் பராந்தகன் காலத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும். (மத்திய தொல்லியல் துறை -கல்வெட்டு செய்திகள் தொகுப்பு 19)

அதன் பின்னர் இக்கோயிலில் மேலும் பல புதிய பகுதிகள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சோழ மன்னர்களால் விரிவாக்கப்பட்டிருக்கின்றன. பராந்தக சோழன், சுந்தர சோழன், உத்தம சோழன், ராஜராஜ சோழன் கால கல்வெட்டுக்கள் இக்கோயில் முழுமையும் நிறைந்திருந்தன. ஆனால் அந்தக் கல்வெட்டுக்கள் அனைத்தும் ஆல்ய புணரமைப்பு என்ற பெயரில்  சிதைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிவோமா?

மத்திய தொல்பொருள் துறை இக்கோயிலின் கல்வெட்டுக்களை 1970க்கு முன்பே படியெடுத்து பதிப்பித்து வைத்தமையால் இன்று நமக்கு இக்கோயிலில் என்னென்ன கல்வெட்டுக்கள் இருந்தன என்ற சான்றுகள் கிடைக்கின்றன. இவையே சோழ மன்னர்களின் செய்திகளைத் தாங்கிய முறையான ஆவணங்களாக இன்று நமக்கு கிடைக்கின்றன. 1970க்குப் பின்னர் ஆலய நிர்வாகம் செய்த புணரமைப்பு பணி ஆலயத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை விளைவித்திருக்கின்றது.

கல்வெட்டுக்கள் புணரமைப்பின் போது அழிக்கப்பட்டமை போலவே கோயிலைக் கட்டியபோது வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட பகுதிகள் புணரமைப்பு என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையும் இன்றைய நிலையில் காண்கின்றோம். வானலிங்கங்கள் என்ற வகையில் ஆலயத்தின் வேறிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கங்கள் எல்லாம் பெயர்த்தெடுக்கப்பட்டு ஒரு பகுதியில் இரண்டு வரிசையாக நட்சத்திரங்களின் பெயர் கொடுக்கப்பட்டு ராசி நட்சத்திரங்களுக்கான லிங்கங்களாக இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆகம முறைப்படி விநாயகர் இருக்க வேண்டிய இடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு வேரிடத்திலும், துர்க்கை பெயர்க்கப்பட்டு வேறிடத்திலும் என வைக்கப்பட்டிருப்பது நமக்கு இப்படியும் கூட கவனக் குறைவுடன் புணரமைப்பு பணிகளைச் செய்கிறார்களா என திகைக்க வைக்கின்றது.  இது இன்று நம் முன்னே இத்தகைய புணரமைப்பு பணிகளால் ஏற்படும் சேதங்களையே காட்டுகிறது.

தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 19ல் இக்கோயிலின் அனைத்துக் கல்வெட்டுகள் பற்றிய செய்திகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த அரும்பெருங் காரியத்தை செயத மத்திய தொல்பொருள் ஆய்வு நிருவனத்திற்கு வரலாற்றில் ஆர்வமுள்ளோர் அனைவரும் நன்றி செலுத்தக் கடமை பெற்றுள்ளோம்.

இன்று வெளியிடப்படும் விழியப் பதிவு இரண்டு பகுதிகளைக் கொண்டது. இவை இரண்டையும் தொடர்ச்சியாகக் காணும் போது ஆலயத்தின் பகுதிகளையும், எவ்வகையில் கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களையும் நன்கு அறிந்து கொள்ள முடியும்.



யூடியூபில் இப்பதிவைக் காண:


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Sunday, February 2, 2014

மண்ணின் குரல்: பெப்ரவரி 2014:சோழ நாட்டு கோயில் - குடந்தை கீழ்கோட்டம் நாகேஸ்வரசுவாமி கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


சோழ பரம்பரையின் மாவீரன் ஆதித்த கரிகாலனின் மரணச் செய்தியும் அதன் பின்னனியில் இருக்கும் உண்மையும் தெளிவு பெறா விஷயங்களாகவே உள்ளன. பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களில் பலருக்கு அருள்மொழிவர்வனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பது போலவே ஆதித்த கரிகாலனின் உருவத்தோற்றத்தையும் காண நிச்சயம் ஆவல் இருக்கும். அந்த ஆவலை பூர்த்தி செய்கின்றது சோழர்கள் கட்டிய கோயில்களில் ஒன்றான குடந்தை கீழ்கோட்டம் (கும்பகோணம்). இளம் தோற்றத்துடன் இந்த இரண்டு அரச குமாரர்களின் உருவச் சிலையும் மேலும் பல அழகிய சிற்பங்களும்  இக்கோயிலில் அமைக்கப்பட்டிருக்கின்றன. தற்சமயம் இந்தக் கோயில் நாகேஸ்வர சுவாமி கோயில் என்ற பெயருடனேயே அழைக்கப்படுகின்றது.

கல்வெட்டுத்துறை ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆய்வு செய்வதற்குப் மிகப் பிடித்தமானதொரு கோயில் இதுவென்றால் அது மிகையில்லை.

முதலாம் பராந்தக சோழன் தொடங்கி, ஆதித்த சோழன், உத்தம சோழன், ஆதித்த கரிகாலன், ராஜராஜ சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்களைத் தாங்கி நிறகும் ஒரு ஆலயம் இது.

கோப்பரகேசரி வர்மன் எனச் சிறப்பு பெயர் கொண்டழைக்கப்பட்ட ஆதித்த கரிகாலனின் பெருமை சொல்லும் கல்வெட்டுக்கள் மிகத் தெளிவாக வாசிக்கும் நிலையில் இன்றளவும் உள்ள கோயில் இது.

கோயில் அமைப்பில் வியக்கவைப்பது கோயில் கட்டுமானமும் சிற்ப வேலைப்படுகளுமே!  ஏனைய கோயில்களை விட மாறுபட்ட முறையில் சோழ குலத்தோரின் அழகிய உருவச் சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்ட கோயில் இது.

வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன் என சொல்லப்படும் சோழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வைச் சித்தரிக்கும் கற்சிற்பமும் இந்தக் கோயிலில் இடம்பெறுகின்றது. பாண்டியனின் தலையை தன் ஒரு கையால் தூக்கிப் பிடித்து மறு கையில் வாளுடன் வரும் காட்சி இது.

இந்தக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் செய்திகள் சோழ மன்னர்கள் கோயிலில் விளக்கேற்ற நிலங்களைக் கொடையாக வழங்கிய செய்திகளையும், சோழ மன்னர்கள் சில பெயர் குறிப்பிடப்படும் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியிருக்கின்றன. எவ்வகை விளக்குகள் ஏற்றப்பட்டன, அதன் தன்மைகள், விளக்கேற்ற தேவையான எண்ணெய் போன்ற தகவல்கள் கல்வெட்டுச் செய்தியில் அடங்கும்.

இக்கோயிலுக்குச் செல்லும் ஒருவர் இங்கு காணக்கிடைக்கும் கல்வெட்டுக்களை முழுமையாக வாசித்து முடித்தால் சோழர்கால அரச நடைமுறைகளைப் பற்றி விரிவாக தகவல்களை அறிந்து கொள்ளலாம். இக்கோயில் இந்திய மத்திய தொல்பொருள் நிலையத்தால் முழுமையாக படியெடுக்கப்பட்டு விட்டது என்பதும் அவை தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன என்பதும் சிறப்பான விஷயம்.

இந்தப் பதிவில் கோயிலின் பகுதிகளைக் காண்பதோடு டாக்டர் பத்மாவதியும், பரந்தாமனும் கல்வெட்டுக்களை வாசித்து பொருள் சொல்வதையும் காணலாம்.

ஏறக்குறைய 21 நிமிட விழியம் இது. தொடர்ச்சியாக விளக்கம் என்றில்லாமல் இடைக்கிடையே  விளக்கங்கள் இடம்பெருகின்றன.. இதனை மாற்றி வெட்டி ஒட்டுவதில் சிரமம் ஏற்பட்டதால் பெருமளவு மாற்றாமல் ஓரளவு மட்டுமே எடிட் செய்து வெளியிடுகின்றேன். பார்த்து கருத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.


யூடியூபில் காண:http://www.youtube.com/watch?v=4m7hTtYTeKQ&feature=youtu.be


பதிவு செய்யப்பட்ட நாள்: 01.03.2013

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Friday, January 31, 2014

மண்ணின் குரல்: பெப்ரவரி 2014: திருவாவடுதுறை ஆதீன சரசுவதி மகால் நூலகம்





சைவ ஆதீனங்களில் பழமை வாய்ந்தது திருவாவடுதுறை ஆதீனம். திருக்கயிலாயப் பரம்பரை வழி வந்த குருமுதல்வர்கள் இங்கு ஆதீனத்தலைவர்களாக இருந்து இம்மடத்திற்கு உரிமையான கோயில்களையும் கட்டளை மடங்களையும் இன்று வரை பாதுகாத்து சைவ நெறி வளர்த்து வருகின்றனர்.

திருமந்திரம் அருளிய திருமூலர் இங்கு இருந்து பாடல்கள் இயற்றினார் என்பதும் யோகசமாதி அடைந்தார் என்பதனையும் கோயில் ஆதீன வரலாற்றிலிருந்து அறிந்து கொள்கின்றோம்.

இந்தத் திருமடத்தின் நூலகம் சிறப்பு வாய்ந்தது. சரசுவதி மகால் எனப் பெயர் கொண்ட இந்த நூலகத்தில் பழமையான சுவடி நூல்கள் பலவும் கிடைத்தற்கறிய சிறந்த பல தமிழ் நூல்களும் பாதுகாக்கப்படுகின்றன.

இன்றைய வெளியீடாக மலரும் இந்த விழியப் பதிவில் நூலகத்தில் உள்ள சுவடி நூல்களைப் பற்றிய ஒரு அறிமுகம் வழங்கப்படுகின்றது. ஆதீனப் புலவர் இந்த அறிமுகத்தை வழங்குகின்றார்.  அதில் குறிப்பாக மடாதிபதி என்னும் சொற்றொடர் விளக்கம் என்ற தலைப்பிலான ஒரு சுவடி நூல் பற்றிய அறிமுக விளக்கம் இடம் பெறுகின்றது.  அதில் ஆதீனங்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் பற்றிய விபரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சைவ ஆதீனங்கள் அனைத்தும் இந்த நூலில் வழங்கப்பட்டுள்ள முறைகளைப் பின்பற்றியே ஆதீன அலுவல்களை முறைபடுத்துகின்றனர் என்ற செய்தியை இந்த ஒலிப்பதிவின் வழி அறிந்து கொளள முடியும். இந்த நூலை பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆதீனப் புலர் ஒருவர் ஆதீன கர்த்தரின் கட்டளைப்படி தயாரித்த விஷயத்தையும் இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

திருவாவடுதுறை மடத்தின் மற்றுமொரு சிறப்பு இங்கு அனையாத அடுப்பு எப்போதும் இருக்கும் என்பது. தொடர்ந்து அன்னதானம் இங்கு வழங்கப்பட்டு வருகின்றது என்ற செய்தியையும் இந்த பதிவின் வழி நாம் அறியலாம்.

அது மட்டுமல்ல..மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் கையெழுத்தில் அமைந்த ஏட்டுச் சுவடிகளும், பல புராண நூல்களும் நிறைந்த ஒரு நூலகம் இது என்பது இதன் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் விஷயம்.  அதனையும் ஆதீனப் புலவர் பேட்டியில் குறிப்பிடுகின்றார்.

10 நிமிட விழியம் இது . பார்த்து கருத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

யூடியூபில் காண: http://www.youtube.com/watch?v=OSrT_rMAxC8

பதிவு செய்யப்பட்ட நாள்: 28.2.2013

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Sunday, January 26, 2014

மண்ணின் குரல்: ஜனவரி 2014: பஞ்சவன் மாதேவி

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

1978ம் ஆண்டில் தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்களின் மாணவர் குழு ஒரு கோயிலைக் கண்டிபிடித்தனர். அப்போது மண் புதர்களால் மறைக்கப்பட்டு செடிகளும் கொடிகளும் மரங்களும் முளைத்து ஒரு கோயிலை முழுமையாக மறைத்திருந்தது.

அன்று இந்தத் தொல்லியல் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் டாக்டர்.பத்மாவதி அவர்களும் ஒருவர்.

கடந்த ஆண்டு(2013) மார்ச் மாதம் தமிழகத்தில் சோழர் கால கோயில்களைக் காணும் ஒரு முயற்சியாக  டாக்டர். பத்மாவதி, இந்திய தொல்லியல் துறை ஆய்வு மாணவர் பரந்தாமன், நான் ஆகியோர் சென்றிருந்த போது குறிப்பிடத்தக்க சில இடங்களைக் காண வேண்டும் என ஒரு பட்டியல் போட்டுச் சென்றோம். அதில் ஒன்றே பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் பஞ்சவன் மாதேவி கோயில்.

இந்தக் கோயில் 1978ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் அறியப்பட்டு முழு கோயிலும் மீட்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பானதொரு விஷயம். பழுவேட்டறையர் குலப்பெண்ணான பஞ்சவன் மாதேவி மாவேந்தன் ராஜராஜ சோழனின் துணைவியர்களில் ஒருவர். ராஜேந்திர சோழனின் சிற்றன்னை. தன் சிற்றன்னை நினைவாக ராஜேந்திர சோழன் கட்டிய கோயில் இது.

பஞ்சவன் மாதேவியின் பூதவுடலை வைத்து அதன்மேல் சிவலிங்கம் வைத்து கட்டப்பட்ட ஒரு பள்ளிப்படை கோயில் இது என்பது இதன் கூடுதல் சிறப்பு.

இக்கோயில் கண்டெடுக்கப்பட்டபோது இக்கோயிலைச் சுத்தம் செய்து முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டியது பெரிய காரியமாக இருந்திருக்கின்றது. இந்தப் பெரும் பணியை குழுக்களாகப் பிரித்துக் கொண்டு இவர்கள் கோயிலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு குழு கோபுரப் பகுதியைச் சுத்தம் செய்து மரம் செடி கொடிகளையெல்லாம் வெட்டியெடுத்திருக்கின்றார்கள். இன்னொரு குழு கோயில் சுற்றுப் புரத்தில் மண்டிக் கிடந்த காடுகளை வெட்டி அப்புறப்படுத்தியிருக்கின்றாரகள். டாக்டர்.பத்மாவும் சிலரும் கோயிலுக்குள் கிடந்த மண்ணையெல்லாம் அப்புறப்படுத்தி சிலைகளைச் சுத்தப்படுத்தி பிரகாரப்பகுதியைச் சுத்தப்படுத்தியிருக்கின்றார்கள். அருகாமையில் இருந்த கிணற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து கோயில் முழுமையையும் தூய்மைப் படுத்தி கோயிலை வழிபாட்டுக்கு உகந்த வகையில் புத்துயிர் கொடுத்திருக்கின்றார்கள்.

பின்னர் இக்கோயிலை பராமரிக்கும் பொறுப்பு அவ்வூர் மக்களுக்கே என அமைத்து கொடுத்து வந்திருக்கின்றனர். தற்சமயம் கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியும் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புது வர்ணங்களுடன் கோபுரம் காட்சியளிக்கின்றது.

கோயிலுக்குள் செல்லும் போது வௌவால்கள் நம்மைக் கடந்து பறந்து செல்கின்றன. கோயிலின் சுற்றுப்புறச் சுவர் அனைத்திலும் மிகத் தெளிவான  கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தமிழக தொல்லியல் துறையினால் படியெடுக்கப்பட்டு விட்டன.

இப்பதிவின் முதல் சில நிமிடங்கள் கோயிலைக் காணலாம். பின்னர் கோயிலின் உட்புறத்தில் இருக்கும் பழுவேட்டறையர் கட்டுமான முறையில் வடிவமைக்கப்பட்ட நந்தியைக் காணலாம். அதோடு
பள்ளிப்படை என்பது என்ன?
இறந்தவரின் உடலை எவ்வாறு தயார் செய்வர்?
இந்த சடங்கு முறை எந்த  நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது?
..போன்ற விவரங்களை டாக்டர்.பத்மா தொடர்ந்து வழங்குவதையும் காணலாம்.

அற்புதமான வடிவில் அமைந்த சிலைகள் இக்கோயிலின் வெளிப்புறத்தில் காட்சியளிக்கின்றன. கோயிலின் உள்ளே முன் பகுதியில் பஞ்சவன் மாதேவியின் சிலை உள்ளது. கோயிலின் கற்பக்கிருகத்தின் வாசலில் இரண்டு துவார பாலகர்கள் சிலைகள் உள்ளன. இவையும் பழுவேட்டறையர் கட்டுமான வடிவத்தைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டவை.

கோயிலின் கற்பக்கிருகத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நேரே கீழாக பஞ்சவன் மாதேவியின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கின்றது.


யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=T6bTOyTCGoM

புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Tuesday, January 21, 2014

தைப்பூசம்: பத்து மலை (பகுதி3)


பத்துமலை என்பது இயற்கையின் அதிசயம். ஊழிக்காலத்தில் கொப்பளித்து எழும் தீப்பிழம்பிலிருந்து வெடித்த சிறு குமிழி பத்துமலையாக வடிவெடுத்துள்ளது. இவ்வெடிப்பின் ஒரு வாயில் மண்ணையும், மற்றொன்று விண்ணையும் இணைக்கும் விதமாக அமைந்திருப்பதால் புழுக்கமின்றி காற்று இயற்கையாகப் பாய்ந்து முருகன் ஆலயத்தைக் குளிர்விக்கிறது. அறுபடை வீடுகள் மட்டுமின்றி முருகன் இவ்வகையில் மிக அழகான குன்றுகளாகப் பார்த்து இருக்கிறான்.

முருகன் சந்நிதி செல்ல, சொடுக்குக!

Monday, January 20, 2014

தைப்பூசம், பத்துமலை, மலேசியா (பகுதி 2)

அலகு குத்துதல், மயில் காவடி, பால்குடம்

விழியம் காண!

Sunday, January 19, 2014

பத்துமலை தைப்பூசம் (பகுதி 1)

பத்துமலை அடிவாரத்தில் தைப்பூசத்திருவிழாக் காட்சிகள்.

வீடியோ (விழியம்) காண!

Monday, January 13, 2014

தமிழ் மரபு அறக்கட்டளையின் 2014ம் ஆண்டு பொங்கல் சிறப்பு வெளியீடு - டத்தோ ஸ்ரீ ச. சாமி வேலு அவர்களுடனான பேட்டி

வணக்கம்.

அனைவருக்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

இன்றைய பண்டிகை நாளின் சிறப்புக்கு அணிகலனாகத் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு விழியப் பதிவை வெளியிடுகின்றோம்.



  • மலேசிய இந்தியர் சமூக, மற்றும் அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு அரசியல் தலைவர்...
  • மலேசிய அரசியலில் நீண்ட காலம் பங்காற்றியவர்;  மலேசிய அமைச்சில் மிக  நீண்ட காலம் அமைச்சராகப் பணியில் இருந்தவர் என்ற கூடுதல் தகுதியும் கொண்டவர்..
  • சாதனைத் தலைவர் என பெருமையுடன் அழைக்கப்படும் தமிழர்..

டத்தோ ஸ்ரீ ச. சாமி வேலு அவர்கள்!

இந்தியர்களின் மலேசியாவுக்கானத் தொடர்பு என்பது புதிதானதல்ல. கிபி 2ம் நூற்றாண்டு தொடங்கி புத்த மதம் பரப்ப அனுப்பட்ட பலர் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்கு வந்தது போலவே மலேசியாவிற்கும் வந்தனர். இந்திய-மலாயா கடல் வணிகமும் அப்போது  மிகப் பிரபலமாக இருந்தது. இது நீண்ட காலம் நீடித்தும் வந்தது. அதன் பின்னர் 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் கடாரம் மீதான படையெடுப்பு இங்கு தமிழர் பாரம்பரியத்தையும் ஹிந்து சமயத்தையும் மேலும் பரவச் செய்தது. அதற்குப் பின்னர் மீண்டும் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் தொடங்கி வணிகம் செய்யவும், தண்டவாளம் அமைக்கவும் ரப்பர் செம்பனை தேயிலைக் காடுகளில் கூலிகளாகப் பணிபுரியவும், அரசியல் கைதிகளாகவும் என பல்வேறு பரிமாணங்களில் தென்னகத் தமிழர்கள் மலாயா வர அன்றைய ஆங்கிலேய காலணித்துவ ஆட்சி வழி அமைத்துக் கொடுத்த்து.

இச்சூழலில் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியில் மலாயா இருந்தது. இந்த நாட்டின் பெரிய மூன்று பெரும்பான்மை இனங்களான மலாய், சீன, இந்தியர்கள் மத்தியில் படிப்படியாக நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் தோன்ற பல அரசியல் நடவடிக்கைகள் தோன்றியன. இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் சுதந்திர தாகம் மிக ஆழகாமப் பரவி பல அரசியல் நிகழ்வுகளுக்கு வித்திட்டன.

மலேசியாவின் அரசியல் கட்சிகளில் மூத்த கட்சி என்ற பெருமையைப் பெருவது மலேசிய இந்தியன் காங்கிரஸ்( ம இ கா)  Malaysian Indian Congress (MIC). 1946ம் ஆண்டு இந்த அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் திரு ஜோன் திவி (1946 - 1947) அவர்கள். இவருக்குப் பின்னர் தலைவர்களாக பட் சிங் (1947 - 1950), ராமனாத செட்டியார்(1950 - 1951), குண்டன்லால் (1951 - 1955), தேசியத் தோட்டப்புற தந்தை என பரவலாக அழைக்கப்பட்ட, தமிழர்களுக்கு மிகப் பல தொண்டாற்றிய துன் வி.தீ.சம்பந்தன் (1955 - 1973), டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வீ மாணிக்கவாசகம் (1973 - 1979) என்ற தலைவர்கள் வரிசையில் ஏழாவது தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர் டத்தோ ஸ்ரீ சாமி வேலு சங்கிலிமுத்து அவர்கள். 1979 முதல் 2010 வரை, ஏறக்குறைய 31 ஆண்டுகள் இந்த அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கட்சிக்கும் மலேசிய இந்தியர்களுக்கும் பெருமை தேடித்தந்தவர் இவர்.

மலேசியத் தமிழர் நலன் தேவைகளுக்காக ம இ கா என்பதோடு நின்று விடாமல் நாட்டின் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் இவர். இவரது காலத்தில் தான் மலேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு இப்போது இருக்கும் மலேசியா முழுமைக்குமான வடக்கு-தெற்கு, கிழக்கு மேற்கு என அனைத்து நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டன. வடக்கில் தாய்லாந்திலிருந்து தெற்கில் சிங்கப்பூர் வரை செல்லும் தரம் வாய்ந்த சாலை அமைந்ததும் இக்காலகட்டத்தில் தான்.

மிகச் சாதரண குடும்பத்தில் மிகுந்த ஏழ்மை நிலையில் பிறந்து வளர்ந்து பல்வேறு சிரமங்களுக்கிடையே கட்டிடத்துறை ஆர்க்கிடெக்டாக கல்வியில் தன்னை உயர்த்திக்கொண்டு, சமூக நலனில் ஆர்வம் கொண்டு  அரசியல் கட்சியில் ஈடுபட்டு படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இவர். இன்று இவரது முயற்சியில் மலேசியத் தமிழ் மாணவர் நலனுக்கென்று ஒரு பல்கலைக் கழகம் கடாரம் என்று நாம் முன்னர் அறிந்த கெடா மானிலத்தில் AIMS  என்ற பெயரில் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களது விழியப் பதிவு பேட்டியே இன்றைய பொங்கல் தின சிறப்பு வெளியீடாக மலர்கின்றது.

அக்டோபர் மாத இறுதியில்  மலேசியாவில் 28.10.2013 அன்று டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்களின் அமைச்சரக அலுவலகத்தில் இந்தப் பதிவு செய்யப்பட்டது.

பேட்டி காண்போர்: முனைவர்.சுபாஷிணி , டாக்டர்.நா.கண்ணன்
பேட்டி கேமரா ஒலிப்பதிவு: டாக்டர்.நா.கண்ணன், முனைவர்.சுபாஷிணி

இந்தப் பேட்டியில் டத்தோ ஸ்ரீ ச.சாமி வேலு அவர்கள்

  • ம இ கா வின் வரலாறு
  • தமிழிலேயே அரசியல் கூட்டங்கள் நிகழ்த்தும் வகையில் நிகழ்ந்த மாற்றங்கள்
  • தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையிலான பல முயற்சிகள்
  • சமூக மேம்பாட்டிற்கு கல்வி
  • தமிழர்களுக்காக ஒரு பல்கலைக்கழகம் - AIMS  பல்கலைக்கழக உருவாக்கம்
  • தனது இளமை கால அனுபவங்கள்
  • இந்திய சுதந்திர நடவடிக்கைகள் மலாயாவில் ஏற்படுத்திய தாக்கம் 
  • மலேசிய சாலை அமைப்பு  - இந்தியாவில் மலேசிய சாலை அமைப்பு முயற்சிகள்

என பல்வேறு விஷயங்களை விளக்குகின்றார்.


யூடியூபில் இப்பேட்டியைக் காண: http://www.youtube.com/watch?v=iq2F6ZBMRLU


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]